Published:Updated:

`திறம்பட வேலை செய்ய தினமும் இதைச் செய்வேன்'- 84 வருடங்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்த 100 வயது நபர்

வால்டர் ஓர்த்மேன்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 100 வயதான ஒருவர், ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

`திறம்பட வேலை செய்ய தினமும் இதைச் செய்வேன்'- 84 வருடங்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்த 100 வயது நபர்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 100 வயதான ஒருவர், ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Published:Updated:
வால்டர் ஓர்த்மேன்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 100 வயதான வால்டர் ஓர்த்மேன் (WALTER ORTHMANN) என்பவர் ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 1922-ல் பிறந்த இவர், இண்டஸ்ட்ரியாஸ் ரெனாக்ஸ் எஸ்.ஏ (Industrias Renaux S.A.) என்ற டெக்ஸ்டைல் நிறுவனத்தில் விற்பனை உதவியாளராக தனது 15 வது வயதில் (ஜனவரி19,1938) வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் நீண்ட நாள்கள் பணிக்குப் பிறகு பதவி உயர்வு பெற்று சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சேல்ஸ் மேனேஜராக பல விற்பனைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். தற்போது இவருக்கு வயதாகிவிட்டதால் விற்பனைப் பயணங்களுக்குச் சென்றுவருவதைத் தவிர்த்துவிட்டு பிரதிநிதிகள் குழுவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு வேறெந்த நிறுவனத்திற்கும் மாறாமல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி நம்பிக்கைக்குரிய பணியாளர் என்னும் பெயரையும் பெற்றவர். கடந்த ஏப்ரல் 19 அன்று தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர் ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் 9 நாட்கள் பணியாற்றியவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

`திறம்பட வேலை செய்ய தினமும் இதைச் செய்வேன்'- 84 வருடங்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்த 100 வயது நபர்

இது பற்றிக் கூறிய அவர், "நீங்கள் உங்கள் வேலையை விரும்பிச் செய்ய வேண்டும். நான் அந்த விருப்பத்துடனும், போராட்ட மனப்பான்மையுடனும் என் பணியைச் செய்யத் தொடங்கினேன். வெறுமனே வேலை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எந்த வேலையையும் செய்துவிட முடியாது. அது வேலைக்கும் ஆகாது, அதில் நீங்கள் நிலையாக நிற்கவும் முடியாது" என்று கூறினார்.

மேலும், 100 வயது வரை இன்னும் உடல் ஓயாமல் வேலை செய்வது குறித்துக் கூறிய அவர், "திறம்பட வேலை செய்ய நான் எனது உணவுப் பழக்கங்களைச் சரியாகப் பின்பற்றுவேன். உண்மையில் நான், உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்த்து வருகிறேன். குடலை காயப்படுத்தும் விஷயங்களான கோக் மற்றும் பிற சோடாக்களை தவிர்த்து நல்லதை மட்டுமே நான் உட்கொள்கிறேன். இது உடல் எப்போதும் வலுவாக இருக்க உதவுகிறது." என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism