Published:Updated:

அமெரிக்கா: தங்கையைக் காப்பாற்றிய சிறுவனுக்கு `உலக சாம்பியன் பட்டம்’ - நெகிழும் நெட்டிசன்கள்

தங்கையுடன் சிறுவன்
தங்கையுடன் சிறுவன்

``உடலின் உயரத்தை உங்களால் அளவிட முடியும். ஆனால், இதயத்தின் உயர்த்தை உங்களால் அளவிட முடியாது; நீதான் உண்மையான ஹீரோ.”

அமெரிக்காவில் அமைந்துள்ள வயோமிங் எனும் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன், பிரிட்ஜர் வால்கர். குட்டி சகோதரியைக் கடிக்க வந்த நாயுடன் போராடி பிரிட்ஜர், தன் சகோதரியைக் காப்பாற்றினான். ஆனால், அந்த நாய் பிரிட்ஜரை கடித்துக் குதறியது. `இந்தச் சம்பவத்தில் யாராவது இறக்க நேர்ந்தால் அது நானாகதான் இருக்க வேண்டும்’ என நினைத்து நாயுடன் போராடி தன் தங்கையைக் காப்பாற்றினான் சிறுவன் பிரிட்ஜர். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிப்படைந்த சிறுவனுக்கு தலை மற்றும் முகம் என சுமார் 90 தையல்கள் போடப்பட்டன.

சிறுவன் பிரிட்ஜர்
சிறுவன் பிரிட்ஜர்

பிரிட்ஜரின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தை அவரின் உறவினர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ``நாங்கள் எங்கள் துணிச்சலான பையனை மிகவும் நேசிக்கிறோம். மற்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் தங்கள் அணியில் இணைந்துள்ள சிறிய ஹீரோவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனில் அவர் எழுதியிருந்தார். புகைப்படத்தில் இருக்கும் காயமடைந்த பிரிட்ஜரின் முகத்தைப் பார்க்கும்போது அவனுடைய வலி நமக்கும் ஏற்படுவதோடு அவன் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் அன்பு நெகிழவும் வைக்கிறது.

`இறக்க நேர்ந்தால், அது நானாக இருக்க வேண்டும்!’ - தங்கைக்காகச் சிறுவனின் பாசப் போராட்டம்

சமூக வலைதளங்களில் வைரலான இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது அன்பை, ``உடலின் உயரத்தை உங்களால் அளவிட முடியும். ஆனால், இதயத்தின் உயரத்தை உங்களால் அளவிட முடியாது; நீதான் உண்மையான ஹீரோ; நீ விரைவில் குணமடைய வேண்டும்; எனது அரவணைப்புகள்” போன்ற கமென்டுகளால் தெரிவித்தனர். பிரபலங்களும் பிரிட்ஜருக்கு தங்களது அன்பை தெரிவித்து வந்தனர். பலரது மனதையும் வென்ற பிரிட்ஜருக்கு இன்னொரு பரிசும் காத்துக்கொண்டிருந்தது.

தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தன் தங்கையை அணைத்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த `வேல்டு பாக்ஸிங் கவுன்சில்’ புகைப்படத்தின் கேப்ஷனில், ``மனிதநேயத்தின் மிகச் சிறந்த பண்புகளைக் குறிக்கும் 6 வயதான பிரிட்ஜர் வால்கரின் செயலுக்காக அவனுக்கு `கௌரவ சாம்பியன்’ பட்டத்தை அளிப்பதில் பெருமைப்படுகிறோம். பிரிட்ஜர், நீங்கள் ஒரு ஹீரோ” என்று பதிவிட்டுள்ளனர். இதற்கும் அவனுக்கு தனது பாராட்டுகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வளவு பட்டங்கள் கொடுத்தாலும் பிரிட்ஜர் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் அன்புக்கு ஈடேது. பிரிட்ஜர் உண்மையிலேயே நீங்கள் ஒரு ஹீரோ.

13 வயதில் ஸ்டார்ட்அப் நிறுவனம்..! - அசத்தும் சென்னை சிறுவன்!
அடுத்த கட்டுரைக்கு