Published:Updated:

கோவிட் தொற்றால் பாதிப்பு... 411 நாள்களுக்குப் பிறகு மீண்ட 59 வயது நபர்!

கொரோனா வைரஸ்

அந்த நபருக்கு, 2020-ம் ஆண்டு டிசம்பரில் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டன. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட அந்த நபருக்கு, கோவிட் தொற்றை எதிர்த்துப் போராட முடியாதபடி பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தது.

கோவிட் தொற்றால் பாதிப்பு... 411 நாள்களுக்குப் பிறகு மீண்ட 59 வயது நபர்!

அந்த நபருக்கு, 2020-ம் ஆண்டு டிசம்பரில் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டன. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட அந்த நபருக்கு, கோவிட் தொற்றை எதிர்த்துப் போராட முடியாதபடி பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தது.

Published:Updated:
கொரோனா வைரஸ்

இங்கிலாந்தில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயதான நபர், 411 நாள்களுக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் கொடூர தாக்கம் ஏற்படுத்திய வடுக்களை, நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. தொற்றில் இருந்து உலகம் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், இங்கிலாந்தில் ஒருவர், இப்போதுதான் கொரோனாவில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார், அதுவும் 411 நாள்களுக்குப் பிறகு!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனாவால் நீண்ட நாள்கள் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு, 2020-ம் ஆண்டு டிசம்பரில் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டன. மருத்துவப் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்த நபருக்கு, கோவிட் தொற்றை எதிர்த்துப் போராட முடியாதபடி பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தது. அவருக்குத் தீவிரமான நோய் அறிகுறிகள் இல்லை என்றாலும், ஜனவரி 2022 வரை கோவிட் பாதிப்பு நீடித்து வந்ததாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து, லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், தொடக்கத்தில் அவருக்கு கொரோனாவின் B.1 திரிபு கண்டறியப்பட்டது. பின்னர், தொற்றின் புதிய திரிபுகளின் பாதிப்பு அவருக்கு இருந்தது. எனினும், கொரோனா தொற்றுக்கான மருந்துகளின் கலவையைக் கொடுத்து உடல் நிலையை மருத்துவக்குழு கண்காணித்து வந்தது. ஆனால், ஒமிக்ரான் போன்ற புதுவகை திரிபுகளுக்கு எதிராக இந்த மருந்துகள் செயல்படவில்லை. அவரைக் காப்பாற்ற முடியாதோ என்று நாங்கள் உண்மையில் நினைத்தோம்.

கொரோனா
கொரோனா

எனவே, இதற்கு முன் பயன்படுத்தப்படாத இரண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளான பாக்ஸ்லோவிட் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர் ஆச்சர்யப்படும் வகையில் அவரிடம் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருவேளை கடினமான இந்தத் தொடர்ச்சியான நோய்த்தொற்றுகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்கான வழி இதுவாக இருக்கலாம் என்றனர்.

இங்கிலாந்தில், 2.1 மில்லியன் மக்கள், அதாவது அதன் மக்கள் தொகையில் 3.3 சதவிகிதம் பேர், நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டதாக, அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.