Published:Updated:

`ஆணின் வழுக்கைத்தலை குறித்து கேலி பேசுவதும் பாலியல் குற்றம்தான்’ - இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம்

வழுக்கை | Baldness (Representational Image) ( Photo by Nicola Barts from Pexels )

`ஆணின் வழுக்கைத்தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றம்தான்’ என இங்கிலாந்தில் தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்த ஊழியர் ஒருவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதையடுத்து, சரியான காரணமின்றித் தன்னைப் பணிநீக்கம் செய்துவிட்டதாக அந்த ஊழியர் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழுக்கை | Baldness (Representational Image)
வழுக்கை | Baldness (Representational Image)
Photo by Nicola Barts from Pexels

அவர் தன் மனுவில், ``நான் பணியாற்றிய நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் என்னுடைய வழுக்கைத் தலையைச் சுட்டிக்காட்டி அடிக்கடி கேலி பேசினார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினேன். அதற்குப் பின்பே என்னைப் பணியிலிருந்து நீக்கினார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீர்ப்பு
தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதிகள், ``பெண்களின் உடல் பாகங்கள் குறித்து கேலி செய்வது எப்படி பாலியல் குற்றமோ, அதுபோலத்தான் ஆண்களின் உடல் உருவம் குறித்தும், பாகங்கள் குறித்து கேலி செய்வதும். மனுதாரரின் வழுக்கைத்தலை குறித்து கேலி பேசிய அந்த நிறுவனம் அவருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்" எனத் தீர்ப்பளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism