Published:Updated:

`புலம்பெயர்ந்தோர் அத்துமீறிய படையெடுப்பாளர்களா?’ - பிரிட்டன் உள்துறை செயலரின் விமர்சனத்தால் சர்ச்சை

சுயெல்லா பிரேவர்மேன்

இந்திய வம்சாவளியை சேர்ந்த, பிரிட்டனின் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், `எங்கள் தெற்கு கடற்கரையின் மீது படையெடுப்பு’ என்று குறிப்பிட்டதுடன், `சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாட்டில் இல்லை’ என்றார். இது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

`புலம்பெயர்ந்தோர் அத்துமீறிய படையெடுப்பாளர்களா?’ - பிரிட்டன் உள்துறை செயலரின் விமர்சனத்தால் சர்ச்சை

இந்திய வம்சாவளியை சேர்ந்த, பிரிட்டனின் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், `எங்கள் தெற்கு கடற்கரையின் மீது படையெடுப்பு’ என்று குறிப்பிட்டதுடன், `சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாட்டில் இல்லை’ என்றார். இது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Published:Updated:
சுயெல்லா பிரேவர்மேன்

இங்கிலிஷ் கால்வாயை சிறிய படகுகளில் கடக்கும் புலம் பெயர்ந்தோரை, அத்துமீறி நுழையும் படையெடுப்பாளர்கள் என்ற பொருள்படும்படி விமர்சனம் செய்த பிரிட்டனின் உள்துறை செயலாளரான, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன், கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

பிரிட்டனில், படகு மூலம் இங்கிலீஷ் கால்வாயை கடந்து புகலிடம் வேண்டி செல்வோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. உலகின் பரபரப்பான இந்த நீர்வழிப்பாதையில் பயணித்த புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 8,500 ஆகவும், 2021-ம் ஆண்டில் 28,000 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 40,000 பேர் அபாயகரமான இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

 பிரிட்டன்
பிரிட்டன்

தென்கிழக்கு இங்கிலாந்தின் மான்ஸ்டனில் உள்ள பழைய விமான நிலையமானது புலம் பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக செயலாக்க மையமாக செயல்படுகிறது. அங்கு, சில குடும்பங்கள் கூடாரங்களில் தூங்குகின்றனர்; இவர்களில் பலருக்கு டிப்தீரியா மற்றும் சிரங்கு போன்ற நோய்கள் உள்ளதால் பிரச்னையின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரவர்மேன், புதிதாக புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கான அடிப்படை வசதி குறித்து புலம்பெயர்ந்தோருக்களுக்கான செயலாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்தில் 1600 பேர் மட்டுமே தங்கக்கூடிய சூழலில், 4000 பேர் வரை இருந்துள்ளனர். அப்போது, புலம்பெயர்ந்தோரின் வருகையை, அத்துமீறிய படையெடுப்பு என்ற ரீதியில் குறிப்பிட்டார்.

சுயெல்லா பிரவர்மேன் கூறும்போது, `எங்கள் தெற்கு கடற்கரையின் மீது படையெடுப்பு’ என்று குறிப்பிட்டதுடன், `சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்களை அகதிகள் என்று கூறுவதை நிறுத்துவோம். அவர்களில் பலர் குற்றச் செயல்கள் குழுக்களுடன் தொடர்புடையவர்கள்’ என்றார். அவர் கூறிய இந்த வார்த்தை பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த துணை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக், ’என்னைப் போன்ற ஒரு வேலையில் இருக்கும் நீங்கள், உங்கள் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார்.

Suella Braverman
Suella Braverman
AP

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சிறந்த வாழ்க்கையைத் தேடி இந்த நாட்டிற்கு வரும் மக்களை ஒருபோதும் பேய்த்தனமாக காட்ட மாட்டேன். எப்போதும் இரக்கமுள்ள, வரவேற்கும் நாடாக பிரிட்டன் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன், கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்து, 43 நாள்களில் ராஜினாமா செய்தார். பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக், பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இவரிடம் உள்துறையை ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.