Published:Updated:

`அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதரவு!’ - ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

சீனா மீது அமெரிக்கா சுமத்திய குற்றத்துக்கு ஆதரவு அளித்ததற்காக ஆஸ்திரேலியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் மனிதனின் உயிர் மட்டுமல்லாது மக்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம் என அனைத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களும் அரசும் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த மொத்த கோபமும் தற்போது சீனா மீது பாய்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரிலிருந்து வைரஸ் பரவத்தொடங்கியதே இதற்குக் காரணம்.

சீனா
சீனா
AP

மேலும் சீனாவில் வைரஸ் உறுதியானதும் அதன் வீரியத்தையும் பரவலையும் முறையாகத் தெரிவிக்கவில்லை என்பதும் உலக நாடுகளின் கோபத்துக்கு மற்றுமொரு காரணமாக உள்ளது. கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியதற்கு சீனாதான் காரணம் எனக் குற்றம்சாட்டி வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதையடுத்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வரிசையாக சீனா மீது குற்றம் சுமத்தி வருகின்றன

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்துதான் வைரஸ் உருவானதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், அதே வுகானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் வேலை செய்தவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர் இறைச்சி சந்தைக்குச் சென்றதால்தான் கொரோனா பரவியதாக ஐரோப்பிய நாடுகள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டின. ஆனால், சீனா இதை முற்றிலும் மறுத்துவிட்டது. தொடர்ந்து வைரஸ் பரவிய விவகாரம் தொடர்பாக சீனா மீது சர்வதேச தனிநபர் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இதை ஏற்க மறுத்த சீனா, விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என நேரடியாக அறிவித்துவிட்டது.

செங் ஜிங்கே
செங் ஜிங்கே

இந்நிலையில் அமெரிக்காவின் தனிநபர் விசாரணை கருத்துக்கு ஆஸ்திரேலியா வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க மிரட்டலும் விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள ஆஸ்திரேலியாவின் சீன தூதர் செங் ஜிங்கே (Cheng Jingye), ‘சீனாவுக்கு எதிரான அரசியல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ள வாஷிங்டனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா செயல்படுவது பெரும் ஆபத்தானது.

`கொரோனா நேரத்தில் எங்கள் கவனம் சிதறும்!’ - சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா

தங்கள் நாட்டுடன் நட்பாக இல்லாத ஆஸ்திரேலியாவுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று சீன மக்கள் நினைப்பார்கள். அதேபோல் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது தடைப்பட்டு மாட்டிறைச்சி மற்றும் ஒயின் ஆகியவற்றின் ஏற்றுமதி நிறுத்தப்படும். அமெரிக்கா சொல்வதை அப்படியே ஆஸ்திரேலியாவும் பிரதிபலிப்பது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். சீன தூதரின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு