Published:Updated:

ஷாப்பிங்கின்போது காத்திருக்கும் கணவர்களுக்காக சீனாவின் கண்டுபிடிப்பு!

'குளோபல் ஹார்பர்' மாலில் இயங்கும் ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்

ஷாப்பிங்கின் போது மனைவியுடன் செல்லும் கணவர்கள் வெகுநேரம் காத்திருப்பார்கள். இந்த காத்திருப்பு நேரங்களை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு சீனாவில் உள்ள மால் ஒன்று 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்' (husband storage pods ) என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கயிருக்கிறது.

பொதுவாக ஷாப்பிங்கின்போது மனைவியுடன் செல்லும் கணவர்கள் வெகுநேரம் காத்திருப்பார்கள். இந்த காத்திருப்பு நேரங்களை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு சீனாவில் உள்ள மால் ஒன்று 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்' என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் என்ற நகரில் உள்ள 'குளோபல் ஹார்பர்' என்ற மால் ஷாப்பிங்கின்போது மனைவிகளுடன் வரும் கணவர்களுக்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்' என்ற இந்த கண்ணாடி கேபின் அறையை உருவாக்கியுள்ளது. இந்த ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட் அறையில் பொழுதுபோக்கிற்காக பல வகையான கேம்ஸ், படம் பார்ப்பதற்கான சிறிய திரை என பல அம்சங்கள் உள்ளன

'குளோபல் ஹார்பர்' மாலில் இயங்கும் ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்
'குளோபல் ஹார்பர்' மாலில் இயங்கும் ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்

இந்த 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ் பாட்' தற்போது இலவசமாக இயங்கிவரும் நிலையில் விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க இந்த 'குளோபல் ஹார்பர்' மால் திட்டமிட்டுள்ளது. இதை பயன்படுத்தியப் பலர் இது நன்றாக உள்ளது என்றும் மீண்டும் பள்ளி நாட்களுக்குத் திரும்பிய அனுபவங்களை வழங்குவதாக உள்ளது என்றும் கூறிவருகின்றனர். மேலும் இது போன்று எல்லா மால்களிலும் வந்தால் மனைவியுடன் ஷாப்பிங் செல்வது நல்ல அனுபவமாக அமையும் என்று தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism