Published:Updated:

`2 மாத வீட்டுச் சிறை; விடுவிக்கப்பட்ட 60 மில்லியன் மக்கள்!’ - தற்போது எப்படி உள்ளது சீனா? #Corona

சீனா ( AP )

வைரஸில் இருந்து விடுபட்ட சீனாவில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

`2 மாத வீட்டுச் சிறை; விடுவிக்கப்பட்ட 60 மில்லியன் மக்கள்!’ - தற்போது எப்படி உள்ளது சீனா? #Corona

வைரஸில் இருந்து விடுபட்ட சீனாவில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Published:Updated:
சீனா ( AP )

வுஹான் நகரத்திலிருந்து உருவான கொரோனா வைரஸால் மிகப் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்ட சீனா, பல்வேறு மாறுபட்ட சிகிச்சைகள் மற்றும் கடுமையான விதிமுறைகளின் மூலம் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தி, தன் நாட்டையும் மக்களையும் காப்பாற்றியுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த சீனா எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டது என்பது உலகம் அறிந்ததே. இரண்டு மாத கடும் போராட்டத்துக்குப் பிறகு, தற்போது வைரஸ் தாக்குதலிலிருந்து சீனா முழுவதும் மீண்டுவிட்டது. இன்னும் சில நாள்களில் சீனாவின் மாகாண எல்லைகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சீனா
சீனா
AP

வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 60 மில்லியன் மக்கள் நேற்று முதல் சாலைகளில் நடமாடத் தொடங்கியுள்ளனர். சுமார் 2 மாத வீட்டுக் காவலுக்குப் பிறகு தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துகொண்டிருக்கின்றனர். சீன அரசின் நம்பிக்கைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வைரஸ் உருவான வுஹான் நகரம், வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அங்கு அத்தியாவசிய தேவைகளும் பொதுப் போக்குவரத்து வாகனங்களும் கணிசமான அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹூபே மாகாணத்தில் வழிபாட்டுத் தலங்கள், அத்தியாவசிய பொருள்கள் விற்கப்படும் கடைகள், உணவகங்கள், காய்கறிச் சந்தை, இறைச்சிக் கடை போன்றவை திறக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களின் தேவைக்கு ஷாப்பிங் செய்ய வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர். அரசு மற்றும் தனியார் வாகனங்களின் இயக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. வீடுகளில் அடைந்துகிடந்ததால், சிலர் தங்களின் மன அமைதிக்காக கடற்கரைக்கும் வருகைதருகிறார்கள். வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாகாணங்களில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்றவை செயல்படத் தொடங்கிவிட்டன.

சீனா
சீனா
AP

என்னதான் சீனா இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும், அங்குள்ள மக்கள் இன்னும் வைரஸ் அச்சத்திலிருந்து விடுபடவில்லை. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் தங்கள் நாட்டை விட்டு முழுமையாகக் கடந்துசெல்லவில்லை என்றும் கவலைகொண்டுள்ளனர். தடை உத்தரவு தளர்த்தப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, வுஹானில் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக, ஒரு பாசிடிவ் நோயாளிகூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதபோது, மருத்துவரின் நிலை மக்களை இன்னும் அச்சத்தின் பிடியிலேயே வைத்துள்ளது. சீனர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என அந்நாடு அறிவித்தாலும் வெளிநாடுகளிலிருந்து சீனா சென்றவர்களுக்கு தொடர்ச்சியாக தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நாடு முழுவதும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் சீனாவின் உண்மையான நிலையை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். சீனா, வைரஸ் போராட்டத்தைக் கடந்து வந்தபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக அந்நாடு முழுவதும் முடக்கப்பட்டதால், அடுத்ததாக பொருளாதாரப் போராட்டத்தை எதிர்கொள்ள மக்களும் அரசும் தயாராகிவருகிறதுவரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் அந்நாடு பொருளாதார ரீதியிலும் சாதாரண நிலைக்கு வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனியும் வைரஸ் பரவாமல் இருக்க, பொதுமக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

சீனா
சீனா
AP

சீனாவில் வைரஸின் நிலை மாறிவிட்டாலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதன் வீரியம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனால் அனைத்து நாட்டு அரசுகளும் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.