Published:Updated:

சீனா: வெள்ளை சுறாவை வறுத்து சாப்பிட்ட tizi vlogger; 10 ஆண்டுகள் சிறை; சொத்துகள் பறிமுதல்?!

வெள்ளை சுறாவை வறுத்து சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் மீது சீனக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சீனா: வெள்ளை சுறாவை வறுத்து சாப்பிட்ட tizi vlogger; 10 ஆண்டுகள் சிறை; சொத்துகள் பறிமுதல்?!

வெள்ளை சுறாவை வறுத்து சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் மீது சீனக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Published:Updated:

பெரிய வெள்ளை சுறாவை வறுத்து சாப்பிடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. சுமார் 8 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட சீனாவைச் சேர்ந்த திசி (Tizi) என்ற பெண் vlogger ஒருவர் வெள்ளை சுறாவை வறுத்து சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளிட்டிருக்கிறார் சீனாவில் சட்ட விரோதமாகக் கருதப்படும் இந்த செயலைச் செய்ததற்காக சீன காவல் துறையினர் அந்த பெண்மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வீடியோவில் அந்த பெண், "இது பார்க்கும் போது கொடூரமாகத் தோன்றலாம், ஆனால் அதன் இறைச்சி உண்மையிலேயே மென்மையாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

Tizi
Tizi

அது தன்னை விட உயரமானது என்பதைக் காட்ட அதன் அருகில் படுத்துக் கொள்கிறார்.இவர் சமைப்பதை காண குவிந்திருந்த மக்கள் மத்தியில் அந்த சுறாவை சுத்தம் செய்தும் , பின் அங்கு குவிந்திருந்த பார்வையாளர்களுக்கு அவர் சமைத்ததையும் கொடுத்திருக்கிறார். ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்ட அந்த வீடியோ சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியால் அவரது கணக்கில் இருந்து அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் பாதுகாக்கப்படும் உயிரினங்களில் வெள்ளை சுறாவும் இடம்பெற்றிருப்பதால், அவரின் இந்த சட்டவிரோத செயலுக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவரது சொத்துகள் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடமிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!