Published:Updated:

`6 வார கேப்; ஒரே நாளில் 108 பேர் அட்மிட்!' - மீண்டும் சீனாவை இறுக்கும் கொரோனா

சீனா
சீனா ( AP )

சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து ஒட்டுமொத்த மனிதக் குலத்தையும் வீட்டுக்குள் பூட்டிவைத்துள்ளது. சுமார் 3 மாதங்கள் வைரஸ் பிடியில் சிக்கித் தவித்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாகாணங்களில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

சீனா
சீனா
AP

பிற அனைத்து நாடுகளுக்கும் தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்றவை சீனாவில் இருந்துதான் ஏற்றுமதியாகின்றன. இந்த நிலையில், அங்கு மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,160 -ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,341 ஆகவும் இருந்தது. கடந்த மார்ச் 5-ம் தேதிதான் அங்கு அதிகபட்சமாக 143 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘3 நிமிடங்கள் முற்றிலும் உறைந்து போன சீனா’ - கொரோனாவால் இறந்தவர்களுக்கு மாபெரும் அஞ்சலி

அதற்குப் பிறகு சீனா முழுவதும் மொத்தமாக 98 பேருக்கு வைரஸ் இருப்பதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் வெளிநாட்டிலிருந்து சீனா வந்தவர்கள் என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த வாரம் பெய்ஜிங்கில் மட்டும் ஒரே நாளில் 99 சீனர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே எண்ணிக்கை நேற்று ஒரேநாளில் 108 - ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 6 வாரங்கள் கழித்து தற்போது அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-யை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா
சீனா
AP

வெளிநாட்டிலிருந்து சீனா வந்த பயணிகள் மூலமாகவே அங்கு மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் பெய்ஜிங் நகரில்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக அங்கு பெரும் வைரஸ் வெடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு