Published:Updated:

வௌவால் மூலம் கொரோனா தொற்று; ஆராய்ச்சியைத் தொடங்கிய சீனா! - நிதியுதவி அளித்த அமெரிக்கா

வௌவால்
வௌவால்

வௌவால்களிலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதன் மீது ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது சீனா.

சீனாவின் வுகான் நகரத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் ஏறத்தாழ 20 லட்சம் பேரைத் தாக்கியுள்ளது. கொள்ளை நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் கொரோனா வைரஸால் சுமார் 1,24,000 பேருக்கு மேல் உயிரிழந்தும், பல லட்சம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி
மருத்துவ ஆராய்ச்சி

கொரோனா வைரஸ் குறித்த பல ஆய்வுகள் உலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், கொரோனா வைரஸ் வெளவால்களால் பரவி இருக்கக் கூடும் என்ற சர்ச்சை பல மாதங்களாக நிலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, வுகானின் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் வெளவால்களில் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது.

வௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்? ஆச்சர்யம் தந்த ஆய்வுகள்!

பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, வுகானின் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து 1000 மைல்களுக்கு அப்பால், யுனான் பகுதியில் இருந்த வெளவால்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் இந்தச் சோதனைக்காக அமெரிக்க அரசாங்கம் நிதி உதவி செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தால் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிதி அளிக்கப்பட்ட ஒரு திட்டத்தின்கீழ், வெளவால்களின் மீதான ஆராய்ச்சிக்கு 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌவால்
வௌவால்

இந்நிலையில், டெய்லி மெயில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் அரசக் குடும்பத்தினர், `வுகான் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர், இந்த வைரஸ் பரவி இருக்கக் கூடும் என்பதைப் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல' எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வுகான் வைராலஜி நிறுவனத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளர்கள் மீது எதிர்பாராதவிதமாக வைரஸ் கலந்த இரத்தம் தெளித்ததன் விளைவாகப் பரவியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

மேலும், fatal swine acute diarrhoea syndrome caused by an HKU2-related coronavirus of bat origin என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில், வைரஸ் பரவலுக்கு முன்பாக வுகானில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியைத் தெளிவாக விளக்குகிறது. அதன்படி, விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை வளர்த்து, பிறந்து மூன்று நாள்களான பன்றியினுள் செலுத்தி உள்ளனர். வைரஸ் தொற்றால் நோய்வாய்ப்பட்ட பன்றியின் குடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை மற்ற பன்றிகளுக்கும் வழங்கியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா
சீனா
AP

வுகான் ஜின்யிண்டன் மருத்துவமனையின்ல்பணியாற்றி வரும் மருத்துவர் காவ் பின், ‘தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் 41 நோயாளிகளில் 13 பேர் வைரஸ் பரவிய வுகான் சந்தைக்குச் சென்று வந்த பயண வரலாறு இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், கடல் உணவுகள் விற்கப்படும் சந்தைகள் மட்டுமே வைரஸ் பரவலுக்கான ஆதாரமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

வுகானில் உள்ள இறைச்சிச் சந்தை ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கருத்து விஞ்ஞான ரீதியில் ஏற்புடையதாக இருந்தாலும், ஆய்வகத்தில் நடந்த முட்டாள்தனமான ஆராய்ச்சிகளினாலும் வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்ற கருத்தை நிராகரிப்பதும் ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு