Published:Updated:

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்
News
சீன அதிபர் ஜி ஜின்பிங் ( ட்விட்டர் )

சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, செப்டம்பர் 16-ம் தேதி அன்று சீனாவுக்குத் திரும்பினார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு ஜின்பிங் நாடு திரும்பியபோது, அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் கைதுசெய்தனர் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவத் தொடங்கியது.

மேலும், ``சீன அதிபர் வீட்டுச் சிறையில் இருக்கிறார். சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார்" எனத் தகவல் வெளியானது. சீனாவின் அடுத்த அதிபராக ராணுவத் தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சீன அதிபரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.