Published:Updated:

`தாமத நடவடிக்கைகளே வைரஸ் பரவலுக்குக் காரணம்’ - சீன அரசை விமர்சித்த பெண் மருத்துவர் மாயம்!

மருத்துவர்
மருத்துவர்

'கொரோனா நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தியதே வைரஸ் பரவலுக்குக் காரணம்' என சீன அரசை விமர்சித்த அந்நாட்டு மருத்துவர், தற்போது மாயமாகியுள்ளார்.

ஜனவரி மாதம் சீனாவில் பரவியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் இன்று உலகம் முழுவதும் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் பிடியிலிருந்து வெளியில் வரமுடியாமல் மொத்த உலகமும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என அனைவரையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது இது. தினசரி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா
சீனா
AP

இப்படி மொத்த உலகத்தையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், முதல் முறையாக சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸால் சீனாவில் மட்டும் 80,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 3000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, தற்போது அங்கு வைரஸ் பரவல் முற்றிலும் குறைந்துவிட்டதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, கடந்த ஒரு வாரமாக மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் வைரஸ் பரவலுக்கு அந்நாட்டு அரசின் தாமத நடவடிக்கைகளே காரணம் எனக் குற்றம் சாட்டிய ஐ ஃபென் (Ai fen) என்ற சீன பெண் மருத்துவர், தற்போது மாயமாகியுள்ளதாக ஃப்ரான்ஸை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் Reporters Without Borders என்ற அரசு சாரா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவர் ஐ ஃபென், வுஹான் மத்திய அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநராக உள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பற்றி முதல் முறையாக வெளி உலகுக்கு உறுதிப்படுத்தியது இவர்தான்.

மருத்துவர் ஐ ஃபென்
மருத்துவர் ஐ ஃபென்

கடந்த மார்ச் 29-ம் தேதி, ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்ற ஐ ஃபென்,, கொரோனா பற்றியும் அதைத் தங்கள் நாடு எதிர்கொண்ட விதம் பற்றியும் சுமார் 60 நிமிடங்கள் பேட்டியளித்துள்ளார். அதேபோல், சீனாவின் தினசரி நாளிதழான Renwu என்ற பத்திரிகைக்கும் பேட்டியளித்துள்ளார். இது நடந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது மருத்துவர் காணாமல் போயுள்ளதாக RWB தெரிவித்துள்ளது. அதேபோல், Renwu - வின் இணையப் பக்கத்திலிருந்து மருத்துவர் ஐ ஃபென் அளித்த பேட்டி நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

`சீன அரசைக் கொந்தளிக்க வைத்த கொரோனா செய்தி!' - மூன்று பத்திரிகையாளர்களுக்குக் கெடு

இது பற்றிப் பேசியுள்ள மற்றொரு சீன மருத்துவர் செட்ரிக் அல்வியனி, “சீன அதிகாரிகள் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதையும் அதைப் பின்பற்றுவதையும் தாமதப்படுத்தினர். அதுதான் இந்த அளவுக்கு வைரஸ் பரவல் அதிகரித்ததுக்கு பெரும் காரணம்'' என்று அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மருத்துவர் ஐ ஃபென் பேசியிருந்தார். அவரது நிலைமை குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும், ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அவரையும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் விடுவிக்குமாறும் சீன அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனா
சீனா

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சீனாவைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் மற்றும் 3 அரசியல் விமர்சகர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்தவர்கள் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக RWB குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு