Published:Updated:

1993-ல் நடந்த கொலை... 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் கைதுசெய்த சீன காவல்துறை! - நடந்தது என்ன?!

சீன காவல்துறை ( ட்விட்டர் )

29 வருடங்களுக்கு முன்பு செய்த கொலைக்காக இப்போது ஒருவரை சீன காவல்துறை கைதுசெய்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

1993-ல் நடந்த கொலை... 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் கைதுசெய்த சீன காவல்துறை! - நடந்தது என்ன?!

29 வருடங்களுக்கு முன்பு செய்த கொலைக்காக இப்போது ஒருவரை சீன காவல்துறை கைதுசெய்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Published:Updated:
சீன காவல்துறை ( ட்விட்டர் )

1993-ம் ஆண்டு சியோங் என்ற குடும்பப் பெயர்கொண்ட நபர், ஒரு தகராறில் ஒரு நபரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டார். அதைத் தொடர்ந்து, மிகவும் ஏழையான அவர், தன் வயதான பெற்றோரையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி அப்போது மிகத் தீவிரமாக நடந்தது. அதன் பிறகு தேடுதல் பணி கொஞ்சம் கொஞ்சமாகச் சோர்வடைந்திருக்கிறது.

இந்த நிலையில், அந்தக் குற்றவாளி, மத்திய சீனாவின் ஹுபெ (Hubei) மாகாணத்திலுள்ள Xiangyang நகரத்திலிருந்து, 1,200 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்தப் பகுதியில் இருக்கும் குவாங்டாங் மாகாணத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே காவல்துறை தொற்றுநோய் தடுப்புப் பணியாளர்களாக வேடமணிந்து அவரின் வீட்டுக்குச் சென்று, காவல்துறை தேடும் குற்றவாளி இவர்தானா எனச் சோதித்திருக்கிறது.

சீன காவல்துறை
சீன காவல்துறை
ட்விட்டர்

அந்தச் சோதனையில், குற்றவாளியை உறுதிசெய்து அப்போதே கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சீனப் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், ``கொலைக் குற்றவாளி இந்த நகரத்தைவிட்டுச் செல்லும்போது மிகவும் ஏழையாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் கைதுசெய்யப்படும்போது மில்லியனராக வாழ்ந்துவந்திருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறது. தற்போது குற்றவாளியிடம் விசாரணை நடந்துவருகிறது.