Published:Updated:

இறுக அணைத்ததால் உடைந்த விலா எலும்புகள்... அலுவலக நண்பர்மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண்

இறுக அணைத்ததால் உடைந்த விலா எலும்புகள் ( சித்தரப்பி )

அலுவலக நண்பர் விளையாட்டாக இறுக அணைத்ததில் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இறுக அணைத்ததால் உடைந்த விலா எலும்புகள்... அலுவலக நண்பர்மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண்

அலுவலக நண்பர் விளையாட்டாக இறுக அணைத்ததில் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
இறுக அணைத்ததால் உடைந்த விலா எலும்புகள் ( சித்தரப்பி )

சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார்.

இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்துவிட்டார்.

கட்டிப்பிடித்தல்
கட்டிப்பிடித்தல்
சித்தரப்பி

பின்னர், வலி மிகுதியாக இருந்ததால்... மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்திருக்கின்றனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் பெரும் மருத்துவச் செலவில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான தரவுகளைக் காட்டி பணம் கேட்டிருக்கிறார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால்தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?" எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்திருக்கிறார். அதையடுத்து இளம்பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அவர் மனுவை விசாரித்த நீதிபதிகள், ``இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பை உடைத்துக்கொள்ளவில்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டனர்.