Published:Updated:

ஸ்பெயின்: காட்டுத்தீயுடன் சேர்ந்த காற்று; நொடியில் தப்பிய தீயணைப்பு வீரர் -பதைபதைக்க வைக்கும் வீடியோ

காட்டுத்தீ

ஸ்பெயினில் காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க பணியிலிருந்த வீரர்கள் ஓடி வந்தனர். அவர்களில் ஒரு வீரர் மட்டும் தவறி விழுந்ததில் அவரின் உடை கருகியது.

ஸ்பெயின் நாட்டில் காட்டுத்தீ ஏற்பட்டது. அந்தக் காட்டுத்தீ ஏஞ்சல் மார்ட்டின் அர்ஜோனா என்னும் பகுதியிலிருந்து வடமேற்கு நகரமான தபராவை நோக்கி வேகமாகப் பரவிவந்தது. அந்த காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சில தீயணைப்பு வீரர்கள் ஒரு வயல் பகுதியில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அதன் மூலம் காட்டுத்தீ சங்கிலித் தொடரை முடிக்க முடியும் என தீவிரமாகச் செயல்ப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் காற்று வீச, தீ அந்தப் பள்ளம் முழுவதும் பரவியது.

அதிலிருந்து தப்பிக்க பணியிலிருந்த வீரர்கள் ஓடிவந்தனர். அவர்களில் ஒரு வீரர் மட்டும் தவறி விழுந்ததில் அவரின் உடை கருகியது. அரை நிர்வாணமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவர் ஓடிவரும் காட்சி பார்ப்போரைப் பதறவைத்திருக்கிறது. காட்டுத்தீயின் வீரியத்தைக் காட்டுகிறது. அதன் பிறகு அவர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!