Published:Updated:

`இதுதான் ஆசிரியருக்கும் வழிகாட்டிக்குமான வித்தியாசம்!’- முதல்முறையாக நிறங்களை ரசித்த சிறுவன்

நிறப் பார்வை குறைபாடு உள்ள ஒரு சிறுவன் முதல் முறையாக நிறத்தைப் பார்த்து உடைந்து அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

சிறுவன் ஜொனாதன்
சிறுவன் ஜொனாதன்

உங்கள் வாழ்வு நிறங்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என என்றைக்காவது நினைத்ததுண்டா.. உங்கள் கண்களுக்கு அனைத்தும் கறுப்பு வெள்ளையாகத் தெரிந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்ததுண்டா.. இப்படியும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள்தான் நிறப் பார்வை குறைபாடு (Color blind) உடையவர்கள்.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ளது மினசோட்டா (Minnesota) மாகாணம். அங்கு நிறப் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு எனத் தனியாகப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் படிக்கும் 12 வயது ஜொனாதன் (jonathan) என்ற மாணவரின் வாழ்வை மாற்றியுள்ளார் ஓர் ஆசிரியர். அதே குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஆசிரியர், தன் குறைபாட்டைப் போக்குவதற்காக பிரத்யேகக் கண்ணாடி ஒன்றைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதன் மூலம் மற்றவர்களைப் போல, நிறக் குறைபாடு உள்ளவர்களும் வண்ணங்களைப் பார்க்க முடியும்.

ஒரே லுக்கில் உலகையே கவர்ந்த இந்த வைரல் பூனையின் பின்னணி தெரியுமா?

இந்நிலையில் அந்த ஆசிரியர், ஜொனாதனுக்கும் அதேபோன்ற பிரத்யேகக் கண்ணாடி ஒன்றை வழங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களை நெகிழவைத்துள்ளது. வீடியோவின் தொடக்கத்தில், ஆசிரியர் கொடுக்கும் கண்ணாடியை மிகவும் சாதாரணமாக வாங்கி போட்டுக்கொள்கிறார் ஜொனாதன். இதுவரை நிறங்களையே பார்க்காத சிறுவன், முதல்முறையாக நிறங்களைப் பார்த்தபோது சிரித்துக்கொண்டே உடைந்து அழுகிறார். உடனடியாக ஓடி வரும் ஆசிரியர் அவரைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறார். பின்னர் முதல்முறையாக வண்ணங்களைப் பார்க்கும் குஷியில் ஜொனாதன் துள்ளிக் குதித்து வண்ணங்களின் பெயர்களைக் கற்கிறார்.

இந்தச் சம்பவங்கள் அடங்கிய வீடியோவையும் அந்தச் சிறுவனுக்கு உதவிய ஆசிரியரையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். `ஒரு ஆசிரியருக்கும் வழிகாட்டுபவருக்கும் இடையே இருக்கும் வேறுபாடு இதுதான். நல்ல ஆசிரியர் என்றும் நினைவில் இருப்பார். ஆனால், நல்ல வழிகாட்டி ஒரு மாணவனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவார்’ எனப் பலர் கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவை ஜொனாதனின் சகோதரர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.