Published:Updated:

"ஒரு நாள் சைக்கிளில் போய்ப் பாருங்க!" - பேருந்து ஓட்டுநர்களுக்கு வித்தியாசப் பயிற்சி அளித்த நிறுவனம்

பேருந்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் கவனமாகப் பேருந்தை ஓட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பேருந்து நிறுவனம் ஒன்று, வித்தியாசமான பயிற்சியை ஓட்டுநர்களுக்கு வழங்கியிருக்கிறது.

"ஒரு நாள் சைக்கிளில் போய்ப் பாருங்க!" - பேருந்து ஓட்டுநர்களுக்கு வித்தியாசப் பயிற்சி அளித்த நிறுவனம்

பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் கவனமாகப் பேருந்தை ஓட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பேருந்து நிறுவனம் ஒன்று, வித்தியாசமான பயிற்சியை ஓட்டுநர்களுக்கு வழங்கியிருக்கிறது.

Published:Updated:
பேருந்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

சாலையில் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் விபத்தில் சிக்கி மரணிக்கின்றனர். அதுவும் நெரிசலான சாலையில், வேகமாகச் செல்லும் கனரக வாகனங்கள் மோதாவிட்டாலும், அது கடந்து போகும்போது சைக்கிள் மற்றும் பைக்கில் செல்பவர்கள் சில விநாடிகள் பதற்றமடைவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், மெக்ஸிகோவின் சான் லூயிஸ் போடோசி நகரசபை, பெரிய வாகனங்கள் ஓட்டுவோர், சிறிய ரக வாகனங்களைக் கடந்து செல்லும்போது, சிறிய வாகன ஓட்டிகள் எப்படி உணர்வார்கள் என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதற்காக, தங்கள் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒரு பயிற்சியளித்தது.

சைக்கிளில் செல்வோரைக் கடந்து செல்லும் பேருந்து
சைக்கிளில் செல்வோரைக் கடந்து செல்லும் பேருந்து
ட்விட்டர்

அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அந்த வீடியோவில், Cycling Machine சாலையின் ஓர் ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதில் கனரக வாகன ஓட்டிகள் சைக்கிளிங் செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சைக்கிளிங் செய்யும்போது, அவர்களை உரசுவதுபோல பேருந்து இயக்கப்படுகிறது. அதனால், அவர்கள் பயப்படும் காட்சி வீடியோவாகப் பதியப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, ``ஒரு நாள் நீங்கள் சைக்கிளில் சென்று பாருங்கள்... அப்போதுதான் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மனநிலை புரியும். பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் செல்லும் அனைத்து வகையான பயணிகளைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும்" எனவும் கனரக வாகன ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும், இந்தப் பயிற்ச்சி 2021-ல் நடத்தப்பட்டதாகவும், ஆனால், அதன் வீடியோ இப்போதுதான் வேகமாகப் பகிரப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. கனரக வாகன ஓட்டிகள் உயரமான வாகனத்தை ஓட்டுவதும் அவர்களின் கவனக்குறைவுக்குக் காரணம் என்றும் சில கருத்துகள் பகிரப்படுகின்றன.