Published:Updated:

`உள்நாட்டு போருக்கும் காலராவுக்கும் பலியாகும் உயிர்கள்...’ - கொரோனாவை எதிர்கொள்ளுமா ஏமன்?

ஏமன்
ஏமன் ( AP )

அடுத்த நொடி என்ன நடக்கும், எப்போது எங்கே குண்டு விழும் எனப் பதற்றத்துடன் வாழும் ஏமன் நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கிறது?

சீனா, இத்தாலி போன்ற பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடுகளே கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்கம் குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்கூட்டியே அறியவும் முடியாது. இதுவரை இந்த வைரஸ் தாக்கத்துக்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம் மட்டும் இந்த நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். மக்களை வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தனிநபர் சுகாதாரம் அவசியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த வைரஸால் பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

உலகமே கொரோனாவை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அடுத்தநொடி என்ன நடக்கும் எப்போது எங்கே குண்டு விழும் எனப் பதற்றத்துடன் வாழும் ஏமன் நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கிறது? இன்று நாம் சந்தித்திருக்கும் இக்கட்டான சூழலில் அத்தியாவசியம் எனக் கருதும் சானிடைசர்கள் (கிருமிநாசினிகள்) அந்த மக்களுக்கு ஆடம்பரப் பொருள்களாகத் தெரிகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நல்லவேளையாக ஏமன் நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்த தகவல்கள் இல்லை. அங்கு பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர் உலக சுகாதார நிபுணர்கள். உள்நாட்டு போரின் காரணமாக மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து முகாம்களிலும் கிடைக்கும் இடங்களிலும் தங்கியுள்ளனர்.

‘மனிதர்களாகச் சிந்தியுங்கள்; ஏழைகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்!’ -அக்தர் அட்வைஸ் #Corona

உள்நாட்டுப் போர் ஏமன் மக்களை வாட்டி வதைப்பது போதாது என காலரா நோய் தன்னால் முடிந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வரவிருக்கும் மழைக்காலத்தை ஏமன் மக்கள் அச்சத்துடனே எதிர்நோக்கியுள்ளனர். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஏமனில் காலரா நோயினால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏமனின் கடந்த ஐந்து ஆண்டுக்கால வரலாறு மிகவும் மோசமாக உள்ளது.

ஏமன்
ஏமன்

உள்நாட்டு போரின் காரணமாக ஒவ்வொரு 3 மணிநேரத்துக்கும் ஒருமுறை ஒருவர் உயிரிழக்கிறார். இதுமட்டுமல்லாமல் நோய்த் தாக்குதல் காரணமாக ஏற்படும் மரணங்களும் அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 90 பேர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காலரா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உள்ளது. இந்த மக்களுக்கு கொரோனா புதிய அச்சுறுத்தலாக இருக்கும். 50 சதவிகித சுகாதார நிலையங்கள் மட்டுமே அங்கு செயல்பாட்டில் உள்ளது. அங்கும் மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும் பணியாளர்கள் தட்டுப்பாடும் உள்ளது.

`உலகின் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம்!’ - பிரிட்டிஷ் எழுத்தாளர் #coronavirus

ஏமன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. கொரோனா குறித்து இதுவரை எந்தத் தகவலையும் ஏமனின் சுகாதாரத்துறை பதிவுசெய்யவில்லை. ஏமனில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்திக்காத பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக சுகாதாரத்துறையின் கணக்கின்படி ஏமன் நாட்டில் உள்ள 18 மில்லியன் மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

“மக்களை கைகளைக் கழுவுங்கள் தூய்மையாக இருங்கள் எனப் பரிந்துரைக்கலாம். ஆனால், அவர்களிடம் எதுவுமே இல்லாதபோது என்ன செய்வது. நாம் அத்தியாவசியம் என்று நினைக்கும் பொருள்கள் எல்லாம் அவர்களுக்கு ஆடம்பரமாக இருக்கிறது என்கின்றனர் தன்னார்வ அமைப்பினர்.

“காலராவை எதிர்கொள்ளவும், பசியை போக்குவதற்கும் உலக நாடுகளுக்குத் தெரியும். ஏனென்றால் இவையெல்லாம் புதிய நோய்கள் இல்லை. ஏமனில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையானது முற்றிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இது போரில் ஈடுபடுபவர்களால் மட்டுமல்ல அந்த நெருப்புக்கு ஆயுதமாகச் சென்றவர்களாலும்தான் இந்த நிலை”’ என வருத்தம் தெரிவிக்கின்றனர் தன்னார்வ அமைப்புகள்.

கொரோனா பாதிப்புகள் குறித்து ஏமனில் இன்னும் தகவல் உறுதிப்படுத்தபடவில்லை. இருப்பினும் அதன் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, கத்தாரில் கொரோனா பரவி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு