Published:Updated:

`மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்!’ -ஐ.நா பொதுச்செயலாளர்

ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்
ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்

மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என ஐ.நா-வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் மொத்த மனித குலமும் வீட்டுக்குள் அடைபட்டுள்ளது. இதனால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்த வைரஸ், மனிதர்களை மட்டுமல்லாது பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில், 'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்' என ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். 50-க்கும் அதிகமான ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் உரையாடும்போது இதைக் கூறியுள்ளார் ஆன்டானியோ.

அவர், ''பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி மட்டுமே உலகை இயல்புநிலைக்குக் கொண்டுவரும். மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே தற்போதைய சூழலுக்கான நிரந்தர தீர்வு.

தடுப்பூசி பல கோடிக்கணக்கான மக்களின் உயிர்களையும் பல ட்ரில்லியன் டாலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்பப்படுகிறது. தடுப்பூசியை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்குத் தேவையான வேகத்தையும் அளவையும் அதிகரிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா
ஐ.நா

பல ஆப்பிரிக்க நாடுகள் கொரோனாவைத் தடுக்க சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். `அனைத்து நாடுகளும் வைரஸ் பரவலைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு