Published:Updated:

மகனுக்காக காத்திருக்கும் 90 வயது தாய்; கண்ணாடி வழியே காதலை பகிரும் ஜோடி!- சீனாவின் நம்பிக்கை #Corona

சீனா மருத்துவமனை
சீனா மருத்துவமனை

கொரோனா வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறார்கள் சீன மக்கள்.

மகனை பார்த்துக்கொள்ளும் 90 வயது தாய்... கண்ணாடி ஜன்னல்களுக்கு இடையே முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் காதல் ஜோடி... மகளை ஆரத்தழுவி முத்தமிட முடியாமல் கலங்கும் தாய் இவையெல்லாம் கடந்த சில நாள்களாக இணையத்தை வென்ற சில விஷயங்கள். சீனாவிலிருந்து வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும், செய்திகளாகவும் வெளியாகி மனதைப் பாதித்த சில விஷயங்கள் இவை. கொரோனா வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறார்கள் சீன மக்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் இது புத்தாண்டு மாதம். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீதிகள் எல்லாம் ஆரவாரமின்றி காணப்படுகிறது. சாலைகள் எங்கும் முகமூடி மனிதர்கள். நகரங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ நகரம் என அழைக்கப்படும் வுகானின் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து இருக்கின்றனர். மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராது சேவையாற்றி வருகின்றனர். சீனாவில் உள்ள மருத்துவ அலுவலர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் சேவையாற்றி வருகின்றனர்.

வுகான் மருத்துவமனையில் 90 வயது மூதாட்டி ஒருவர் வராண்டாக்களில் காத்திருந்தார். அவரின் மகனுக்கு 63 வயது. கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருமகள், பேரன் இருவரும் வெளிநாடுகளில் இருப்பதால் சீனா திரும்ப முடியாத சூழலில் இருக்கின்றனர். அந்த மூதாட்டிக்கு மகள் ஒருவர் இருக்கிறார். மகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் மகனைப் பார்த்துக்கொள்ள இந்தத் தள்ளாத வயதில் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். எனக்கு 90 வயதாகிவிட்டது எனக்கு என்ன நடந்தால் என்ன என மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

மகனே நம்பிக்கையோடு இரு இந்த நோயை வென்று வா.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மூதாட்டி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு வைரஸ் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மகனின் படுக்கைக்கு அருகே அமர்த்து அவரை கவனித்துக்கொண்டிருந்தார். கடந்த 2-ம் தேதி முதல் அவரின் மகன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது தன் மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ``மகனே நம்பிக்கையோடு இரு இந்த நோயை வென்று வா” எனக் கூறியுள்ளார்.

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த சென் யிங். செவிலியரான இவர் கடந்த 11 நாள்களாக மருத்துவமனையில் சேவையாற்றி வருகிறார். சென் யிங்கை காண்பதற்காக அவரின் காதலன் வந்திருந்தார். மருத்துவமனையின் கண்ணாடி திரைக்கு பின்னால் நின்று சென் யிங் காதலனைப் பார்த்தார். கண்களால் காதலைப் பரிமாற்றிக்கொண்டார். கண்ணாடி ஜன்னல்களுக்கு இடையே முத்தங்களைப் பரிமாற்றிக்கொண்டனர். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சீனா மீண்ட பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

சென் யிங்
சென் யிங்

இணையத்தை வென்ற வீடியோக்கள்

வுகானைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 10 நாள்களாகத் தன் வீட்டுக்குச் செல்லாமல் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தந்தையைக் காண வந்த அவரின் மகன் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தார். மருத்துவமனையின் மாடியில் இருந்து மகனை நோக்கி கையசைத்தார். தந்தையை ஜன்னல் வழியே பார்த்த மகிழ்ச்சியில் அந்தச் சிறுவன் திரும்பிசென்றார்.

பின் செல்ல