Published:Updated:

`காலி இருக்கைகள்.. ரத்தாகும் சேவைகள்..!’ - கொரோனாவால் பெரும் நஷ்டத்தில் ஏர்லைன்ஸ்கள்

கொரோனாவால் விமான சேவை பாதிப்பு
கொரோனாவால் விமான சேவை பாதிப்பு

கொரோனா பாதிப்பால் விமான சேவைகள் முடங்கியுள்ளன. பிற தொழில்கள் போல விமான சேவை நிறுவனங்களைக் கருத முடியாது. விமானத்தின் ஒவ்வொரு காலி இருக்கையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குப் பேரிழைப்பை ஏற்படுத்தக் கூடியது.

கொரோனா மனித உயிர்களை மட்டும் கொல்லவில்லை. உலகப் பொருளாதாரத்திலேயே பெரிய தேக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், விமான சேவைகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் தவிக்கின்றன. 'கடை விரித்தாலும் கொள்வார் இல்லை' என்கிற நிலையில், அடிமாட்டு விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், பயணம் மேற்கொள்ள மக்கள் முன் வரவில்லை.

கொரோனா
கொரோனா

ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்ல, அதைச் சார்ந்த பிற தொழில்களான விமான நிலையப் பராமரிப்பு நிறுவனங்கள், பெட்ரோல் நிறுவனங்கள், விமான உற்பத்தி நிறுவனங்கள், விமானங்களுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களும் நொடியும் நிலையில் உள்ளன. பிற தொழில்கள் போல விமான சேவை நிறுவனங்களைக் கருத முடியாது. விமானத்தின் ஒவ்வொரு காலி இருக்கையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குப் பேரிழைப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏனென்றால், இது ஒரு காஸ்ட்லியான தொழில்துறை.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச விமான நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொரோனா பாதிப்பால் நடப்பாண்டில் 63 முதல் 113 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு 30 பில்லியன் யு.எஸ் டாலர்கள் வரை நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கியதிலிருந்து பிப்ரவரி மாத இறுதி வரை உலகம் முழுக்க 3,47,414 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு
Freepik

சீனாவுக்குள் மட்டும் 2,90,519 விமான சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது, சீன விமான நிறுவனங்கள் படிப்படியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு 500 முதல் 600 மில்லியன் டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்த நீதிமான்கள் செய்ததையும் ரஞ்சன் கோகோய் செய்ததையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்! #MustRead

இதன் காரணமாக, பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஆள் குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பல நாடுகளில் விமான சேவை நிறுவனங்கள் மூடப்படலாம் என்கிற அச்சமும் உருவாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு