Published:Updated:

கொரோனா அச்சத்தில் உலக நாடுகள் - கரம்கொடுக்கும் தனியார் நிறுவனங்கள், உலக பணக்காரர்கள்!

கொரோனா வைரஸ்
News
கொரோனா வைரஸ்

உலக நாடுகளின் மருத்துவப் பணியாளர்கள் தங்களது சேவையை, பாதுகாப்புக் குறைவான சூழலோடு எதிர்கொள்ளாமல், நல்ல மனநிலையுடன் சேவையாற்ற பலர் உதவுகின்றனர்!

உலகம் முழுவதும் கேட்கும் வார்த்தையாகிவிட்டது கொரோனா வைரஸ். வைரஸ் பரவலின் வீதம் நாளுக்கு நாள் பெருகி வரும் சூழல், மக்களிடம் பரபரப்பையும், அச்ச உணர்வையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில், மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான மருத்துவ வசதிகள் இன்றி பரிதவித்து வருகின்றனர்.

இத்தாலி
இத்தாலி

உலக நாடுகளில் உள்ள மருத்துவப் பணியாளர்கள் தங்களின் உயிரை துச்சமென எண்ணி, மக்களைக் காக்கும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதோடு, மருத்துவப் பணியாளர்களின் சேவையையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், உலக நாடுகளின் மருத்துவப் பணியாளர்கள் தங்களது சேவையை, பாதுகாப்பு குறைவான சூழலோடு எதிர்கொள்ளாமல், நல்ல மனநிலையுடன் சேவையாற்ற பல தனியார் நிறுவனங்களும் உலகின் முன்னனி பணக்காரர்கள் பலரும் கடந்த சில தினங்களில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மார்க் ஸக்கர்பெர்க்.
மார்க் ஸக்கர்பெர்க்.

`கோவிட்19' வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு அவசரமாக மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஃபேஸ்புக் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க், அமெரிக்க சுகாதாரப் பணியாளர்களுக்கு 7,20,000 சுவாச முகக் கவசங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், கொரோனா பரவலால் முகக் கவசங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழலில் ஆப்பிள் மற்றும் பிற நிறுவனங்களோடு இணைந்து மில்லியன் கணக்கில் அவற்றை வழங்கி சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் துணை நிற்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா
அலிபாபா நிறுவனத் தலைவர் ஜேக் மா

அலிபாபா நிறுவனரும் சீனாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான ஜேக் மா, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறார். இப்போது நாம் எதிர்கொண்டிருக்கக் கூடிய கொரோனா வைரஸ் தொற்றை எந்த ஒரு தனி நாட்டினாலும் கட்டுப்படுத்த முடியாது என சமீபத்திய ட்விட்டர் பதிவில் ஒன்றில் தெரிவித்திருந்தார் ஜேக் மா.

இந்த நிலையில், இந்தியா தவிர ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, மாலத்தீவு, மங்கோலியா, மியான்மர், பாகிஸ்தான், இலங்கை ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 1.8 மில்லியன் முகக் கவசங்கள், 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை உபகரணங்கள், பணியில் இருக்கும் மருத்துவச் செவிலியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவும் 36,000 பாதுகாப்புக் கவசங்கள், வென்டிலேட்டர்கள், சுரமாணி ஆகியவற்றை வழங்கி உதவியுள்ளார்.

மாஸ்க்
மாஸ்க்

மேலும், கொரோனா வைரஸால் உலக அளவில் மூன்றாவது அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், பொதுமக்கள் பயன்படுத்த போதிய அளவில் மாஸ்க் கிடைக்கவில்லை என்ற சர்ச்சையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜேக் மா 5 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை செய்யும் கருவிகளையும், 1 மில்லியன் மாஸ்க்குகளையும் அமெரிக்காவுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

`குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யுங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார், மைக்ரோசாஃப்ட் தலைவர் பிராட் ஸ்மித். மேலும், இவர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனா தொற்றுக்கு எதிரான நிதியாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

சீனா, இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனாவின் கோரத்தாண்டவம் அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்துக்கு 1,200 வென்டிலேட்டர்களை சீனாவிலிருந்து அனுப்பி வைப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இந்தியாவில், வேதாந்தா குழுமத் தலைவரும் தொழிலதிபருமான அனில் அகர்வால் தேசத்தைக் காப்போம் என்பது நாம் மேற்கொண்ட உறுதிமொழி என சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட 100 கோடி ரூபாய் அளிப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
vikatan

இந்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானி கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு மருத்துவ நிதி உதவியாக 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளதோடு, நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் நலமுடன் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுவதற்காக தினமும் 1,00,000 மாஸ்க்குகள் வரை தயாரிப்பதற்கான தயாரிப்புத் திறனை அதிகப்படுத்துவதாக அம்பானி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு உலக பணக்காரர்கள் மட்டும் உதவினால் போதாது. இதை எதிர்கொள்ள அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பு தேவை. ``இப்போது நாம் கொரோனாவை வென்றுவிட்டாலும், நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கத் தவறினால் இன்னும் பல வியாதிகள் வரும்” - இதைச் சொன்னது, உலக சுகாதார அமைப்பு. கொரோனா கால கட்டம் என்றுமட்டுமல்லாது நாம் நமது சுற்றுப்புறத்தை, இயற்கையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்