Published:Updated:

டிசம்பர் 5 - இன்று உலக மண் தினம்: மண்ணுக்கும் உயிர் இருக்கிறது!

உலக மண் தினம்
News
உலக மண் தினம்

பூமியில் வாழும் ஒவ்வோர் உயிரினத்துக்கும் நீர் மற்றும் ஊட்டச்சத் துக்களைத் தேக்கி வைக்கும் தன்மையுடைது மண். அதுபோல பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வடிகட்டவும் செய்கிறது.

டிசம்பர் 5 - இன்று உலக மண் தினம்: மண்ணுக்கும் உயிர் இருக்கிறது!

பூமியில் வாழும் ஒவ்வோர் உயிரினத்துக்கும் நீர் மற்றும் ஊட்டச்சத் துக்களைத் தேக்கி வைக்கும் தன்மையுடைது மண். அதுபோல பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வடிகட்டவும் செய்கிறது.

Published:Updated:
உலக மண் தினம்
News
உலக மண் தினம்

மண்ணை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2014-ம் ஆண்டு முதல்  ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 5-ம் நாள், உலக மண் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தட்பவெப்பநிலை மாற்றம், காற்றோட்டம், நீரோட்டம், தாவர வளர்ச்சி, உயிரிகளின் செயல்கள் எனப் பல்வேறு காரணிகளால் பாறைகள் சிதைந்து பூமியின் மேற்பரப்பில் உருவானதுதான் மண்.

உலக மண் தினம்
உலக மண் தினம்

பூமியில் வாழும் ஒவ்வோர் உயிரினங்களுக்கும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தேக்கி வைக்கும் தன்மையுடைது மண். அதுபோல பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வடிகட்டவும் செய்கிறது.

மண் துகள்களின் அளவு மற்றும் மண்ணில் உள்ள நீர், ஊட்டச்சத்து, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ளும் இயல்பு, இவற்றை வைத்துதான் ஒவ்வொரு மண்ணின் தன்மைக்கும் ஏற்ப அவற்றை வகைப்படுத்தலாம். இதன்படி, ஒரு துகளின் விட்டம் 0.002 மிமீ (0.0008 அங்குலம்)-க்கும் குறைவாக இருந்தால் அதை களிமண் என்றும், 0.002 மிமீ (0.0008 அங்குலம்) மற்றும் 0.05 மிமீ (0.002 அங்குலம்) வரை இருந்தால் வண்டல் என்றும் 0.05 மிமீ (0.002 அங்குலம்) வரை இருந்தால் மணல் என்றும் வகைப்படுத்தப்படும்.

மண்ணில் ரசாயனமும் கனிம வளங்களும் உள்ளன. பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மிகவும் பொதுவான கனிமமானது ஃபெல்ட்ஸ்பார் (feldspar) ஆகும். இது சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன அலுமினோசிலிக்கேட் ஆகும். அதுபோல மண்ணில் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் உள்ளன.

உலக மண் தினம்
உலக மண் தினம்

இடத்தின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போல, மண்ணின் தன்மையும் மாறுபடும். மண்ணின் நிறம், அமைப்பு மற்றும் உற்பத்தித்திறனை வைத்து மண்ணை வகைப்படுத்தலாம். அதன் அடிப்படையில், அமெரிக்காவில் மட்டும் இதுவரை 70,000 வகையான மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

ஆய்வு ஒன்றின் அடிப்படையில், 1 தேக்கரண்டி மண்ணில் 100 மில்லியன் முதல் 1 பில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. அதுபோல 1 கிராம் மண்ணில் 75,000 வகையான பாக்டீரி யாக்களும் 25,000 வகையான பூஞ்சைகளும், 1000 வகையான புரோட்டோசோவா மற்றும் பல நூறு வகையான நூற்புழுக்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் மட்டும் 1,400,000 மண்புழுக்கள் காணப்படுமாம். எனவே, மண் உயிருள்ளது என்கிறது ஆய்வு.

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மண் அரிப்பு, மனிதர்களால் தோண்டப்படுவது மற்றும் மண்ணில் அதிக அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல் மண்ணை அதன் தன்மை இழக்கச் செய்கிறது. மண்ணில் உள்ள லட்சக்கணக்கான உயிரினங்கள் இறப்பதன் மூலம் மண்ணும் இறக்கவே செய்கிறது. இதனால் உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படுகிறது.