Published:Updated:

`சாண்ட்விச் கொண்டுவர லேட் பண்ணுவியா?’ - பிரான்சில் வெயிட்டருக்கு நேர்ந்த கொடுமை

ராம் பிரசாத்

பாரீஸ் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வர தாமதமானதால், வெயிட்டரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ்
பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் Noisy-le-Grand suburb east பகுதியில் உள்ள அந்த உணவகத்தில், வெள்ளிக்கிழமை மாலை வேளை என்பதால், வழக்கத்துக்கு அதிகமாகவே கூட்டம் இருந்தது. சமீபத்தில்தான் உணவகம் திறக்கப்பட்டது என்றாலும் சில மாதங்களிலே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டது. இந்தப் பகுதியில் அதிகமாக போதைப்பொருள்கள் சப்ளை செய்யப்படுவதால், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.

sandwich
sandwich

வெள்ளிக்கிழமை மாலை உணவகத்திற்கு வந்த ஒருவர், சாண்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவகத்தில் பணிபுரியும் 28 வயதுடைய இளைஞர்தான் ஆர்டர் எடுத்துள்ளார். சாண்ட்விச் வருவதற்குத் தாமதமானதால், வெயிட்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தீடிரென, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வெயிட்டரை சுட்டுவிட்டார். அந்த இளைஞரின் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த நபர், துப்பாக்கியுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதையடுத்து, உணவக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழு, அந்த இளைஞருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். காவல்துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

sandwich
sandwich

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர்,``ஆர்டர் செய்த உணவு உடனடியாக வரவில்லை என அந்த நபர் கோபமாக நடந்துகொண்டார். ஒரு சாண்ட்விச்சுக்காக கொலை நடந்துள்ளது என்பதை நம்ப முடியவில்லை. இந்த உணவகம், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்தப் பகுதியில் அதிக அளவில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. போதை ஆசாமிகளால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.