Published:Updated:

சீன விமான விபத்து; கண்காணிப்பில் இந்திய போயிங் 737 விமானங்கள்!

சீனா ஈஸ்டர்ன் விமானம் ( கோப்புப்படம் )

அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 இடையிலான ஆறு மாத காலத்தில் இரண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் விபத்தில் சிக்கி மொத்தம் 346 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துகளைத் தொடர்ந்து, டிஜிசிஏ மார்ச் 2019-ல் இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களைத் தடை செய்தது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சீனா ஈஸ்டர்ன் பயணிகள் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. போயிங் 737 ரக பயணிகள் ஜெட் விமானம் குன்மிங்கில் இருந்து குவாங்சி மாகாணத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது வுஜோ நகருக்கு அருகிலுள்ள தெங்சியன் கவுண்டி எனும் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 133 பேர் இறந்தனர்.

China Eastern Boeing 737
China Eastern Boeing 737
Zhou Hua/Xinhua via AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று இந்திய விமான நிறுவனங்களும் போயிங் 737 விமானங்களைக் கொண்டுள்ளன. எனவே போயிங் 737 இந்திய விமானங்கள் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும், விமானப் பாதுகாப்பு தீவிரமான வணிகமாகும், நாங்கள் நிலைமையை உன்னிப்பாகப் கண்காணித்து வருகிறோம் எனவும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 இடையிலான ஆறு மாத காலத்தில் இரண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் விபத்தில் சிக்கி மொத்தம் 346 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துகளைத் தொடர்ந்து, டிஜிசிஏ மார்ச் 2019-ல் இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களைத் தடை செய்தது.

டிஜிசிஏ-வுக்கு திருப்தி அளிக்கும் வகையில் போயிங் நிறுவனம் தேவையான மென்பொருள் திருத்தங்களைச் செய்த பின்னரே, 27 மாதங்களுக்குப் பிறகு விமானத்தின் மீதான வணிகச் செயல்பாடுகள் தடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது.

Boeing 737 Max jet plane
Boeing 737 Max jet plane
AP Photo/LM Otero, File

போயிங் 737-800 மற்றும் 737 இன் அட்வான்ஸ் வெர்ஷனே இந்த போயிங் 737 மேக்ஸ் விமானம். அமெரிக்க விமான நிறுவனமான போயிங், சீனாவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism