Published:Updated:

உக்ரைன் விவகாரம்: ``பேச்சுவார்த்தை மட்டுமே இதற்குத் தீர்வு!" -ஐ.நா-வில் இந்தியா கருத்து

ஐ.நா

"அதிகரித்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர்ப் பதற்றத்தைத் தணிக்க ஆக்கபூர்வமான, அறிவார்ந்த நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். அதுதான் காலத்தின் தேவையும்கூட" என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கூறியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர்ப் பதற்றம், உலக நாடுகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் ஒன்றை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தியுள்ளது. இதில் பேசிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ``அதிகரித்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர்ப் பதற்றத்தைத் தணிக்க ஆக்கபூர்வமான, அறிவார்ந்த நடவடிக்கைகளைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் காலத்தின் தேவையும்கூட. உலக நாடுகளின் அமைதியைப் பாதுகாப்பதையே நோக்கமாக ஏற்று, அனைத்து நாடுகளின் சட்டபூர்வமான பாதுகாப்பு நலன்களைக் கருத்தில்கொண்டு அதற்கான உடனடித் தீர்வை காண்பதில்தான் இந்தியாவின் ஆர்வமும் உள்ளது.

உக்ரைன் பிரச்னை
உக்ரைன் பிரச்னை
ஹாசிப் கான்

இது தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. மேலும் அறிவார்ந்த பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் என்பதே எங்களின் கருத்து. ஆக்கபூர்வமான ராஜதந்திரமே இப்போதைய தேவை" எனப் பேசினார்.

அதிகரித்துவரும் உக்ரைன் பதற்றம் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism