Published:Updated:

`பொதுமக்கள் நலனே முக்கியம்; லாபக் கணக்கெல்லாம் அப்புறம்தான்!’ -மூடப்பட்ட டிஸ்னி லேண்ட் பூங்காக்கள்

டிஸ்னி லேண்ட்
டிஸ்னி லேண்ட்

கொரோனா பாதிப்பு காரணமாக டிஸ்னி லேண்ட் பூங்காக்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரைப்படங்களில் கதாபாத்திரங்களாகவே மட்டும் பார்த்து ரசித்த கார்ட்டூன் கேரக்டர்களை குழந்தைகள் நேரில் கண்டு ரசிக்கும்விதமாக உருவாக்கப்பட்டதுதான் ‘டிஸ்னி லேண்ட்’. இந்தப் புகழ்பெற்ற பொழுதுபோக்கு பூங்கா ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அமைந்துள்ளது. இது வால்ட் டிஸ்னியின் கனவு என்றுகூட சொல்லலாம். இன்று உலகின் நம்பர் 1 பொழுதுபோக்குப் பூங்காவாகத் திகழ்கிறது டிஸ்னி லேண்ட். கார்ட்டூன்களில் நாம் பார்க்கும் கற்பனை இடம், கதாபாத்திரங்கள் அத்தனையும் தத்ரூபமாக டிஸ்னி லேண்டில் அமைந்திருக்கும்.

டிஸ்னி லேண்ட்
டிஸ்னி லேண்ட்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டிஸ்னி லேண்ட் பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 11 டிஸ்னி பூங்காக்கள் அமைந்துள்ளன. அதில் 5 மட்டும் டிஸ்னி லேண்டாகச் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 6 தீம் பார்க் ஆக உள்ளது.

இனி 10 வருஷத்துக்கு நாங்கதான்... வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி... கில்லி யார்?

உலகளவில் கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜப்பானில் இதுவரை 600-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஜப்பானில் 19 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதேபோல் இத்தாலி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவை தற்காலிகமாக மூடுவதாக டிஸ்னி லேண்ட் அறிவித்துள்ளது.

டிஸ்னி லேண்ட்
டிஸ்னி லேண்ட்

ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் உள்ள டிஸ்னி லேண்ட் ஜனவரி மாதம் பிற்பகுதியிலிருந்து செயல்பாட்டில் இல்லை. அதேபோல் டோக்கியோ டிஸ்னி ரிசார்ட்டில் உள்ள இரண்டு தீம் பார்க்குகள் பிப்ரவரி 29-ம் தேதியே மூடப்பட்டது. தற்போது டிஸ்னி லேண்ட் மற்றும் டிஸ்னி லேண்ட் பாரிஸ் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அனைத்து டிஸ்னி லேண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவாகக் கருதப்படும் டிஸ்னி லேண்ட் மூடப்படுவதால் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். இது பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுகுறித்துப் பேசியுள்ள டிஸ்னி லேண்ட் நிர்வாகம், “பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும்தான் முக்கியம். வருவாய் மற்றும் லாபம் எல்லாம் இரண்டாவதுதான்” எனக் கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு