Published:Updated:

`மருத்துவர்கள் என் இறப்பை அறிவிக்கத் தயாரானார்கள்!’ - கொரோனா நினைவுகளைப் பகிரும் இங்கிலாந்து பிரதமர்

போரிஸ் ஜான்சன் ( AP )

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள்கள் பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

`மருத்துவர்கள் என் இறப்பை அறிவிக்கத் தயாரானார்கள்!’ - கொரோனா நினைவுகளைப் பகிரும் இங்கிலாந்து பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள்கள் பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

Published:Updated:
போரிஸ் ஜான்சன் ( AP )

சீனாவில் டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மார்ச் மாதத்தில் மிகவும் வேகமாக உலகின் அனைத்து மூலைமுடுக்குக்கும் பரவியது. அந்தநேரத்தில் பல நாட்டின் மூத்த தலைவர்கள், பிரபலங்கள், உச்ச நட்சத்திரங்கள் எனப் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இரான் மூத்த தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் எனப் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

கேரி சிமண்டஸ் - போரிஸ் ஜான்சன்
கேரி சிமண்டஸ் - போரிஸ் ஜான்சன்
AP

இவர்களில் பலரும் சாதாரண சிகிச்சைக்குப் பின் மீண்டுவிட்டனர். ஆனால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உயிருக்குப் போராடி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு மீண்டு வந்துள்ளார். மார்ச் மாத இறுதியில் போரிஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர் சிகிச்சை பெற்றபடியே வீடியோ கால் மூலம் அரசாங்க வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 10 நாள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு போரிஸ் ஜான்சனின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் அவர் உடனடியாக லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. 2 வார சிகிச்சைக்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுக் குணமடைந்தார். தொடர்ந்து தான் உயிர் பிழைத்ததற்கு மருத்துவர்கள்தான் காரணம் என நெகிழ்ச்சியாகப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், போரிஸ் ஜான்சனுக்கும் அவரின் வருங்கால மனைவி கேரி சிமண்டஸுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மருத்துவர்களின் பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார் போரிஸ்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
AP

இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள்கள் பற்றி தி சன் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், `நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது ஒரு கடினமான பழைய தருணம். நான் அதை எப்போதும் மறுக்கமாட்டேன். அப்போது நான் அவ்வளவு சுயநினைவுடன் இல்லை, ஆனால் என்னைக் காப்பாற்ற தற்செயலான திட்டங்கள் மட்டுமே மருத்துவர்களிடம் இருந்தது என்பதை அறிந்திருந்தேன். அவர்கள் எனக்கு ஒரு முகமூடியைப் பொருத்தினார்கள். அதன் மூலம் பல லிட்டர் கணக்கான ஆக்சிஜன் எனக்கு ஏற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அந்த நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் மருத்துவர்கள் தயார் செய்துவைத்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் எனக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரும் தவறான திசையில் சென்றது. நான் இந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறப்போகிறேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

ஒரு சில நாளில் என் உடல்நிலை இன்னும் மோசமானது, இனி பிழைக்கப்போவதில்லை என விரக்தியடைந்தேன். வீட்டு சிகிச்சையில் நான் ஏன் நலமடையவில்லை, எதனால் உடல் இவ்வளவு மோசமானது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் கடுமையாகப் போராடி என் உயிரை மீட்டுக்கொண்டுவந்தனர். அவர்களின் அற்புதமான செயலால்தான் நான் மீண்டுவந்தேன். எனவே, அவர்களுக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் போரிஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism