Published:Updated:

65 வயது பெண்ணின் வயிற்றில் 55 பேட்டரிகள்... மன அழுத்தத்தால் பெண் எடுத்த விபரீத முடிவு!

ஸ்கேன் ( Irish Medical Journal )

வயிற்றுவலி என டப்ளினிலுள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

65 வயது பெண்ணின் வயிற்றில் 55 பேட்டரிகள்... மன அழுத்தத்தால் பெண் எடுத்த விபரீத முடிவு!

வயிற்றுவலி என டப்ளினிலுள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

Published:Updated:
ஸ்கேன் ( Irish Medical Journal )

அயர்லாந்திலுள்ள மருத்துவர்கள், 65 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 55 ஏஏ, ஏஏஏ வகை பேட்டரிகளை அகற்றியிருக்கின்றனர். இது தொடர்பாக மருத்துவர்கள், ``மன அழுத்தம் காரணமாக 65 வயது பெண் ஒருவர் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் வேண்டுமென்றே பேட்டரிகளை விழுங்கியிருக்கிறார். வயிற்றுவலி என டப்ளினிலுள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

பேட்டரி
பேட்டரி
ட்விட்டர்

சிகிச்சையின் ஆரம்பத்தில் பேட்டரிகள் அனைத்தும் மலக்குடல் வழியாக வெளியேறிவிடும் எனக் காத்திருந்தோம். அடுத்தடுத்த ஸ்கேன்களில் பெரும்பாலானவை அவரது வயிற்றிலேயே இருந்துவிட்டன. முதல் வாரத்தில் ஐந்து ஏஏ பேட்டரிகளை மட்டுமே மலக்குடல் வழியாக வெளியே வந்தன. பேட்டரிகளின் அதிக எடையின் காரணமாக, விரிந்த வயிறு அந்தரங்க எலும்பின் மேல் தொங்கியது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
65 வயது பெண்ணின் வயிற்றில் 55 பேட்டரிகள்... மன அழுத்தத்தால் பெண் எடுத்த விபரீத முடிவு!
Irish Medical Journal

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரின் வயிற்றில் ஒரு சிறிய துளையிட்டு 46 பேட்டரிகளை அகற்றினர். பெருங்குடலில் சிக்கிய மீதமுள்ள நான்கு பேட்டரிகள், அவரின் மலக்குடல் ஆசனவாய் வழியாக அகற்றப்பட்டன - மொத்தமாக விழுங்கப்பட்ட பேட்டரிகள் 55ம-ம் வெளியே எடுக்கப்பட்டன. அனைத்து பேட்டரிகளூம் ஒரே நேரத்தில் உட்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆச்சர்யப்படும்விதமாக, இந்த மின்வேதியியல் சாதனங்கள் எதுவும் அவரது இரைப்பைக் குடலை பாதிக்கவில்லை. மேலும் அவரின் உடலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தனர்.