Published:Updated:

"எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினாலும் நான் ட்விட்டர் பக்கம் வரமாட்டேன்" - டொனால்டு ட்ரம்ப்

எலான் மஸ்க், ட்ரம்ப்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கவிருப்பதால் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

"எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினாலும் நான் ட்விட்டர் பக்கம் வரமாட்டேன்" - டொனால்டு ட்ரம்ப்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கவிருப்பதால் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

Published:Updated:
எலான் மஸ்க், ட்ரம்ப்

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப்பை வீழ்த்தி அமெரிக்க அதிபரானார். அப்போது ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் ஒன்பது கோடிப் பேரால் பின்தொடரப்பட்டுவந்த ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் ட்ரம்ப்பின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதையடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக டொனால்டு ட்ரம்ப் புதிதாக 'TRUTH' என்னும் புதிய சமூகவலைதள செயலியை அறிமுகப்படுத்தினார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், ட்வீட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் ட்விட்டர் எலான் மஸ்க் வசம் வந்தால் என்ன மாற்றங்களெல்லாம் நிகழும் என சமூகவலைதளங்களில் உரையாடல்கள் நடந்து வருகின்றன. அதில் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கவிருப்பதால் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்மையில் பேசிய ட்ரம்ப், "எலான் ட்விட்டரை வாங்குவார் என்று நான் நம்புகிறேன். அவர் அதை மேம்படுத்துவார், அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் நான் ட்விட்டருக்குத் திரும்பப் போவதில்லை. 'TRUTH' சோஷியல் மீடியாவில்தான் இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism