Published:Updated:

ஆஸ்திரேலியா: கவனக்குறைவாக பள்ளிப் பேருந்தில் வைத்துப் பூட்டிய ஓட்டுநர் - உயிருக்குப் போராடிய குழந்தை

நேவா ஆஸ்டின் ( ட்விட்டர் )

பள்ளியில் அனைத்து குழந்தைகளையும் இறக்கிவிட்ட ஓட்டுநர், நேவா ஆஸ்டினை மட்டும் மறந்துவிட்டார். சிறுமி வகுப்புக்கு வராததால், அவர் விடுமுறை எடுத்துக்கொண்டார் என ஆசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை.

ஆஸ்திரேலியா: கவனக்குறைவாக பள்ளிப் பேருந்தில் வைத்துப் பூட்டிய ஓட்டுநர் - உயிருக்குப் போராடிய குழந்தை

பள்ளியில் அனைத்து குழந்தைகளையும் இறக்கிவிட்ட ஓட்டுநர், நேவா ஆஸ்டினை மட்டும் மறந்துவிட்டார். சிறுமி வகுப்புக்கு வராததால், அவர் விடுமுறை எடுத்துக்கொண்டார் என ஆசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை.

Published:Updated:
நேவா ஆஸ்டின் ( ட்விட்டர் )

ஆஸ்திரேலியா நாட்டின் ராக்ஹாம்ப்டன் மாகாணத்தின் கிரேஸ்மீரில் உள்ள லு ஸ்மைலிஸ் மழலையர் பள்ளியில், 3 வயதான நேவா ஆஸ்டின் என்ற சிறுமி பயின்றுவருகிறார். இந்த நிலையில், நேவா நேற்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், பள்ளியில் அனைத்து குழந்தைகளையும் இறக்கிவிட்ட ஓட்டுநர், நேவா ஆஸ்டினை மட்டும் மறந்துவிட்டார். சிறுமி வகுப்புக்கு வராததால், அவர் விடுமுறை எடுத்துக்கொண்டார் என ஆசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை. 

விசாரணையில் காவல்துறை
விசாரணையில் காவல்துறை
ட்விட்டர்

இந்த நிலையில், கதவுகள் மூடப்பட்ட வாகனத்தில் 6 மணி நேரம் நேவா ஆஸ்டின் சிக்கித் தவித்திருக்கிறார். பின்னர், பள்ளி வாகனம் சுத்தம் செய்யும் ஊழியர் வந்துதான் குழந்தை வாகனத்தில் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அதையடுத்து, பள்ளி ஊழியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மயக்க நிலையில் இருந்த நேவா ஆஸ்டினை குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர். அங்குக் குழந்தை நேவா ஆஸ்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேவா ஆஸ்டின்
நேவா ஆஸ்டின்
ட்விட்டர்

இந்தச் சம்பவம் தொடர்பாக, ``6 மணி நேரம் கடும் வெப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் குழந்தை மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டிருக்கிறாள். மேலும் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் அவர் கொண்டுவரப்பட்டார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism