Published:Updated:

`நிறைந்த கல்லறைகள்; சாலையில் வைக்கப்படும் உடல்கள்‘ - ஈக்குவேடார் சோகம் #Corona

ஈக்குவேடார்
ஈக்குவேடார்

ஈக்குவேடார் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் உடல்கள் பெரிய கொள்கலனில் சேமிக்கப்படுகிறது.

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடு ஈக்குவேடார். ஒரு கோடியே 66 லட்சம் மக்கள் தொகை கொண்ட வளரும் நடுத்தர நாடாக இது உள்ளது. மொத்த உலகையும் ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் ஈக்குவேடாரை மட்டும் விட்டுவைக்குமா என்ன. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா
கொரோனா

மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான இங்கு கொரோனா வைரஸ் தினம் தினம் பல கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது. ஈக்குவேடாரில் மருத்துவமனைகள் மிகக் குறைவு என்பதால் அதற்குள் அனைத்துப் படுக்கைகளும் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் மிக அதிகமாக இருப்பதாகவும் அரசு அதை வெளியில் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

`இறுதி நேரத்தில் தனிமை; முகம் பார்க்க அனுமதி இல்லை' - வேதனையிலும் வேதனை தரும் இத்தாலி உயிரிழப்பு

இதைவிடக் கொடுமையாக இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால் குடும்பத்தினர் அவர்களைச் சாலையில் விட்டுச் செல்லும் அவலம் நிலவுகிறது. ``இங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளிலும் இடம் இல்லாததால் வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே உள்ளனர். அப்படி வீட்டில் இருப்பவர்கள் பலர் உயிரிழக்கின்றனர். இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு அதிகாரிகளுக்குப் போன் செய்து நாங்கள் சோர்ந்துவிட்டோம்.

ஈக்குவடோர்
ஈக்குவடோர்

அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும் ஒரே பதில் காத்திருக்க வேண்டும் என்பதுதான். உயிரிழந்தவர்களால் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது, இதன் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை வேறு வழியில்லாமல் சாலைகளில் விட்டுச் செல்கின்றனர்” என ஈக்குவேடாரை சேர்ந்த பெர்னாண்டோ எஸ்பானா என்பவர் ராயட்டர்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

இது பற்றிப் பேசியுள்ள குயாகுவிலின் நகர மேயர் சிந்தியா விட்டேரி, ``கல்லறைகள் உருவாக்கப்படும் வரை இறந்தவர்களின் உடல்கள் 12 மீ, 40 அடி உயரம் கொண்ட பெரும் குளிர் கொள்கலனுக்குள் வைக்கப்படும். இதுவரை இறந்தவர்களின் உடல் துறைமுக நகரில் உள்ள தனியார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு 100-க்கும் மேற்பட்ட உடல்கள் சேகரிக்கப்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு