Published:Updated:

துருப்பிடித்ததா ஈபிள் டவர்? வண்ணம் பூசுவதற்கு ஆகும் செலவு இவ்வளவா!

ஈபிள் டவர்

ஈபிள் டவர் தற்போது துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

துருப்பிடித்ததா ஈபிள் டவர்? வண்ணம் பூசுவதற்கு ஆகும் செலவு இவ்வளவா!

ஈபிள் டவர் தற்போது துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

Published:Updated:
ஈபிள் டவர்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர், உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்று. கஸ்டாவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோபுரம் பாரிஸின் ஒரு குறியீடாகவே கருதப்படுகிறது.1,063 அடி உயரம் கொண்ட புகழ்பெற்ற இந்த ஈபிள் டவர் தற்போது துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பழுது பார்ப்புக்குப் பதிலாக ஈபிள் டவர் வெறுமனே வண்ணம் மட்டும் பூசப்படுவதாக நிபுணர்கள் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்கின்றனர். 2024-ம் ஆண்டு பாரிஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியையொட்டி 60 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.489 கோடி) செலவில் ஈபிள் டவர் வண்ணம் பூசப்பட்டு வருவதாகவும், ஈபிள் டவரில் இப்படி வண்ணம் பூசப்படுவது இது 20-வது முறை எனக் குறிப்பிடுகின்றனர்.

 ஈபிள் டவர்
ஈபிள் டவர்

தற்போதுவரை கோபுரத்தின் சுமார் 30% அகற்றப்பட்டு இரண்டு புதிய கோட்டுகள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக அவசர அவசரமாக வேலை நடைபெற்று வருகிறது. மேலும், சுற்றுலா வருவாயை இழக்க நேரிடும் என்பதால் பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட நாட்கள் ஈபிள் டவரை மூடவும் SETE தயங்குகிறது. என்று பிரெஞ்சு பத்திரிகையான மரியன்னே (Marianne) தெரிவித்துள்ளது. ஆனால், ஈபிள் டவரை பராமரிக்கும் நிறுவனமான Societe d'Exploitation de la Tour Eiffel (SETE) இது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!