Published:Updated:

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? - பாலியல் குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் பதில்!

Elon Musk | எலான் மஸ்க்

எலான் மஸ்க் 2016-ம் ஆண்டு தனி விமானத்தில் பயணித்தபோது, அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்தத் தவற்றை மறைப்பதற்காக 2018-ம் ஆண்டு எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Bloomberg

அனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் எலான் மஸ்க், ``நான் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசிவருகிறேன். இதனால் என்மீது அரசியல்ரீதியான தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அவர்களெல்லாம் என்னைச் சிறந்த எதிர்காலத்துக்காகப் போராடுவதிலிருந்தும், சுதந்திரம், பேச்சுரிமை குறித்து பேசுவதிலிருந்தும் தடுக்க முடியாது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட நான் முனைந்திருந்தால், எனது 30 ஆண்டுக்கால வாழ்க்கையில் இதுவே முதன்முறையாக வெளிச்சத்துக்கு வர வாய்ப்பில்லை. எனவே, என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை" என ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism