Published:Updated:

ட்விட்டர் விவகாரம்: `பணத்தை செலவழிக்க விரும்பினால் இலங்கைக்கு உதவுங்கள்!' எலான் மஸ்க்கிடம் கோரிக்கை

எலான் மஸ்க்

எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டரின் மொத்தப் பங்குகளையும் 43 பில்லியனுக்கு வாங்கத் தயாராக இருப்பதாகத் அறிவித்திருந்த நிலையில் 'தங்களிடம் உள்ள பணத்தை செலவழிக்க விரும்பினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவி செய்யுங்கள் என பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் உச்சத்தில் அமர்ந்திருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை வாங்கினார். இதையடுத்து ட்விட்டரின் மொத்தப் பங்குகளையும் 43 பில்லியனுக்கு வாங்கத் தயாராக இருப்பதாகத் அறிவித்திருந்தார். இந்த ஒப்பந்தத்திற்கு ட்விட்டர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தான் ட்விட்டரின் பங்குதாரராக இருப்பதா, வேண்டாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று கூறியிருந்தார்.

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு தொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதில் கவனம் செலுத்துவதைவிட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை வாங்கலாம் அல்லது இலங்கைக்கு உதவலாம் என நெட்டிசன்கள் பலர் தங்கள் இணைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் 'ஸ்னாப் டீல்(snap deal) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ குணல் பஹ்ல(kunal bahal), "43 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதைவிட 45 பில்லியன் செலவழித்து இலங்கையை வாங்கலாம் அல்லது உதவி செய்யலாம் என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் சில சமூகவலைதள பயனர்கள் 'ட்விட்டரை விட்டுவிடுங்கள்.. உங்களிடம் இருக்கும் பணத்தை செலவழிக்க விரும்பினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவி செய்யுங்கள்' என ட்வீட் செய்து வருகின்றனர். இதுபோல் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism