Published:Updated:

ட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கமா? - விளக்கமளித்த எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் 75 சதவிகித ஊழியர்களை வெளியேற்றப் போவதாக வந்த செய்திக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கமா? - விளக்கமளித்த எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் 75 சதவிகித ஊழியர்களை வெளியேற்றப் போவதாக வந்த செய்திக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

Published:Updated:
எலான் மஸ்க்

உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களுடன் ட்விட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய உடனே அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பராக் அகர்வால் (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி (CLO) விஜயா கட்டே உள்ளிட்டோரை நிறுவனத்தை விட்டு எலான் வெளியேற்றியிருந்தார்.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் 75 சதவிகித ஊழியர்களை அதாவது 7,500 பேர் பணியாற்றும் நிலையில், 5,000-த்துக்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து எலான் மஸ்க் ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பணிநீக்க தகவல் தொடர்பாக 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க் "இது உண்மை அல்ல" என ட்வீட் செய்துள்ளார்.