Published:Updated:

`கருத்துச் சுதந்திரத்தை விற்கும் திட்டமா?'- ப்ளூ டிக் விமர்சனங்களும், எலான் மஸ்கின் பதில்களும்!

எலான் மஸ்க்

ட்விட்டர் ப்ளூடிக் சர்ச்சை குறித்த விமர்சனங்களும், அதற்கு எலான் மஸ்கின் அதிரடி பதில்களும்...

`கருத்துச் சுதந்திரத்தை விற்கும் திட்டமா?'- ப்ளூ டிக் விமர்சனங்களும், எலான் மஸ்கின் பதில்களும்!

ட்விட்டர் ப்ளூடிக் சர்ச்சை குறித்த விமர்சனங்களும், அதற்கு எலான் மஸ்கின் அதிரடி பதில்களும்...

Published:Updated:
எலான் மஸ்க்

ப்ளூ டிக் பயனாளர்கள் மாதம்தோறும் 8 அமெரிக்க டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளது ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பலரும் எலான் மஸ்க்கின் இந்தப் புதிய திட்டத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த (Democratic Party) அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸாண்ட்ரியா என்பவர் ட்விட்டரின் ப்ளூடிக் சர்ச்சை குறித்து, "இது மக்களின் கருத்துச் சுதந்திரத்தை விற்க முயற்சி செய்யும் திட்டம்" என்று விமர்சனம் செய்திருக்கிறார். மேலும், "$44 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியுள்ளதால் அதைத் தலைக்கு $8 அமெரிக்க டாலர் என்ற வீதம் மக்களிடம் வசூலிக்க எலான் திட்டமிட்டுள்ளார்" என்று விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு எலான், "உங்கள் கருத்துக்கும், விமர்சனத்துக்கும் பாராட்டுகள். ஆனால் இப்போது நீங்கள் $8 அமெரிக்க டாலர் செலுத்திவிடுங்கள்" என்று நையாண்டியாகப் பதிலளித்திருக்கிறார். மேலும், இதை விமர்சனம் செய்பவர்களுக்கு 'Spolier Alert' என்று குறிப்பிட்டு, "நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கேற்ற விஷயங்களை வேறுவகையில் திரும்பப் பெறுவீர்கள்" என்று சூசகமான வகையில் பதிவிட்டுள்ளார். இதுதவிர, "ஒரு நாள் தேநீருக்குச் செலவழிக்கும் பணத்தை 30 நாள்கள் ப்ளூ டிக் வைத்திருப்பதற்குச் செலவு செய்ய மாட்டீர்களா?" என்று பல மீம்களையும் பதிவிட்டு வருகிறார்.

மேலும், ட்விட்டரில் விளம்பரதாரர்களைக் குறிப்பிட்டு ஒரு Poll ஒன்றையும் நடத்திவருகிறார். அதில் கருத்துச் சுதந்திரம் முக்கியமா, தெளிவான அரசியல் பார்வை முக்கியமா என்பதாக ஆப்ஷன்களை வைத்துள்ளார். எலான் மஸ்க்கின் இது போன்ற புதிய திட்டங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும், அடாவடி பதில்களையும் நெட்டிசன்கள் உட்படப் பல முக்கிய பிரபலங்களும் விமர்சித்து வருகின்றனர்.