Published:Updated:

எலான் மஸ்க்கின் அதிரடி திட்டங்கள் - ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் இன்று முதல் தொடங்குகிறதா?

எலான் மஸ்க்

எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்கின் அதிரடி திட்டங்கள் - ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் இன்று முதல் தொடங்குகிறதா?

எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
எலான் மஸ்க்

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளின் பணி நீக்கம், ப்ளூ டிக் விவகாரம் என எல்லாம் பேசுபொருளானதை அடுத்து, தற்போது அடுத்ததாக விவாதம் ஆகியிருக்கும் ஒன்று ஆட்குறைப்பு நடவடிக்கை. ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்களைக் குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து, பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் கசிந்தன.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் 50 சதவிகித ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளைக் குறைக்க அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாள்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் இன்று அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்று (4.10.2022) இமெயில் மூலம் தெரிவிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து ட்விட்டர் இந்தியா அலுவலகத்திலும் சலசலப்புகள் இருப்பதாகவும், பலரும் லாக் அவுட் செய்து காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.