Published:Updated:

ஒரு நாளைக்கு 12 மணிநேரப் பணி; வாரத்தில் 7 நாள் வேலை; ஊழியர்களுக்கான எலான் மஸ்க்கின் புதிய விதிமுறை

எலான் மஸ்க்

ட்விட்டரில் பணிபுரியும் பொறியாளர்களுக்கென சில விதிமுறைகளை எலான் மஸ்க் கொண்டுவந்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளின் பணி நீக்கம், ஆட்குறைப்பு நடவடிக்கை, அடுத்த 3 ஆண்டுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனிடையே ப்ளூ டிக் விவகாரமும் பேசுப்பொருளாக மாறியிருந்தது. அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் வைத்திருக்கும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம்தோறும் இருந்து மாதம் 19.99 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,600 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில்,

ஒரு நாளைக்கு 12 மணிநேரப் பணி; வாரத்தில் 7 நாள் வேலை;  ஊழியர்களுக்கான எலான் மஸ்க்கின் புதிய விதிமுறை

ஸ்டிபன் கிங் என்ற பிரபல அமெரிக்க நாவலாசிரியர், "ஒரு ப்ளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா ? நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும் என்று ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் ட்விட்டர் விளம்பரதாரர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. 8 அமெரிக்க டாலர் என்றால் செலுத்துவீர்களா?" என்று ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. சில ட்விட்டர் பொறியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்யத் தவறினால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.