Published:Updated:

"நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன்!" எலான் மஸ்கின் அடுத்த பிளானா?

Elon Musk, Manchester United

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் அறிவித்துள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

"நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன்!" எலான் மஸ்கின் அடுத்த பிளானா?

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் அறிவித்துள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Published:Updated:
Elon Musk, Manchester United

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்திருந்தார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழுப் பங்கை எலான் மஸ்க் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ட்விட்டரில் போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை அந்த நிறுவனம் தனக்கு அளிக்கவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். மஸ்க் ட்விட்டரை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எலான் மஸ்க் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக தற்போது அவருடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்...

Manchester United team
Manchester United team

“தெளிவாகச் சொல்வதானால், நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன்."

இந்தப் பதிவைத் தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் "நான் மான்செஸ்டர் யுனைட்டெட் அணியை வாங்கப்போகிறேன்" என்று மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். மான்செஸ்டர் யுனைட்டெட் அணி என்பது இங்கிலாந்து உள்ளூர் கால்பந்து கிளப் அணியாகும். இந்த அணி உலகத்திலேயே மிகவும் பிரபலமாகவுள்ள கால்பந்துக் கழகங்களில் ஒன்று. பல கிளப் ஆட்டங்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளது. இந்த அணியில்தான் தற்போது கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.