டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்து பேசிய அவர் 'மத தீவிரவாதம், பிறப்பு விகிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துதல் (artificial intelligence) போன்றவை எதிர்காலத்தில் மனிதகுலம் உயிர்வாழ்வதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது 'என்று கூறினார்.

மேலும் கூறிய அவர், "ஐநாவிடமிருந்து வரும் மக்கள் தொகை மதிப்பீடுகள் அபத்தமாக உள்ளது. அவை புதுப்பிக்கப்பட வேண்டும்' என்று கூறினார். மேலும் 'உண்மையில் பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. இவ்வாறு பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகமான மக்களை தொகையைப் பெற்றுள்ளோம் என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்" எனக் கூறினார் எலான் மஸ்க்.
செயற்கை நுண்ணறிவைத் தவறாக பயன்படுத்துதல் (artificial intelligence) பற்றிக் கூறிய எலான் மஸ்க், 'மனிதனைவிடவும் செயற்கை நுண்ணறிவு (AI) புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறது' என்று கூறினார். எனவே நாம் இந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான வளர்ச்சிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
