Published:Updated:

`போலி ட்விட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும்'- எலானின் அடுத்த நடவடிக்கை?

எலான் மஸ்க்

போலிக் கணக்குகள் (Parody Account) தொடர்பாக எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

`போலி ட்விட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும்'- எலானின் அடுத்த நடவடிக்கை?

போலிக் கணக்குகள் (Parody Account) தொடர்பாக எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:
எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை அரசியல்வாதிகள், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், உள்ளூர் மக்கள் எனப் பலரும் ட்விட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரைப் பயன்படுத்தும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன் ப்ளூ டிக்கிற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது ட்விட்டரை  எலான் மஸ்க்  வாங்கியதால் ப்ளூ டிக்கிற்கு 8 அமெரிக்க டாலர் (ரூ. 661.24) கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கபட்டது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் போலி கணக்குகள்(Parody Account) வைத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கணக்குகள் எவ்வித எச்சரிக்கையுமின்றி நிரந்தரமாக நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எலான்  மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், ``போலிக் கணக்கு( Parody Account) எனக் குறிப்பிடாமல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்தக் கணக்கு எவ்வித எச்சரிக்கையுமின்றி நிரந்தரமாக நீக்கப்படும். கடந்த காலங்களில் கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது அடையாள சரிபார்ப்பு நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வருவதால், எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படாது. இது ட்விட்டரின் ’புளூ டிக் ' வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும்'’ என்று தெரிவித்திருக்கிறார்.