Published:Updated:

Viral video: ட்விட்டர் அலுவலகத்துக்குள் கை கழுவும் சிங்க்கை எடுத்துக்கொண்டு நுழைந்த எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கை கழுவப் பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப் போவதாக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் ட்விட்டரில் போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான விவரங்களை அந்த நிறுவனம் தனக்கு அளிக்கவில்லை என்று கூறி அந்த ஒப்பந்தத்தை கைவிட்டார். மஸ்க் ட்விட்டரை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரின் ஒரு பங்குகை 44 பில்லியன் டாலருக்கு வாங்கப் போவதாக மஸ்க் அறிவித்திருந்தார்.

இதனிடையே ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமைக்குள் (28.10.2022) முடித்துக்கொள்ளப் போவதாக அவர் தனது பங்குதாரர்களிடம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி தனது ட்விட்டர் ப்ரொஃபைலில் Chief Twit என்றும் மாற்றியுள்ளார். இந்தச் சூழலில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கைக் கழுவப் பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அதனை வீடியோவாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.