Published:Updated:

எலான் மஸ்க்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்... ஏலம்விடும் முன்னாள் காதலி! - காரணம் என்ன தெரியுமா?

எலான் மஸ்க் - ஜெனிஃபர் க்வின் ( Jennifer Gwynne )

ஜெனிஃபர் தற்போது முன்னாள் காதலர் எலான் மஸ்க்குடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மஸ்க் அவருக்கு அன்பின் நிமித்தமாகக் கொடுத்த பொருள்கள் ஆகியவற்றை ஏலம்விட முடிவுசெய்திருக்கிறார்.

எலான் மஸ்க்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்... ஏலம்விடும் முன்னாள் காதலி! - காரணம் என்ன தெரியுமா?

ஜெனிஃபர் தற்போது முன்னாள் காதலர் எலான் மஸ்க்குடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மஸ்க் அவருக்கு அன்பின் நிமித்தமாகக் கொடுத்த பொருள்கள் ஆகியவற்றை ஏலம்விட முடிவுசெய்திருக்கிறார்.

Published:Updated:
எலான் மஸ்க் - ஜெனிஃபர் க்வின் ( Jennifer Gwynne )

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 1994-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஜெனிஃபர் க்வின் என்ற பெண்ணைக் காதலித்திருக்கிறார். பின்னர், 1995-ல் எலான் மஸ்க் அங்கிருந்து பால்டோ ஆல்டோவுக்குச் சென்றுவிட்டதால், இருவரின் காதல் முறிந்திருக்கிறது. பால்டோ ஆல்டோவுக்குச் சென்றபோதுதான் மஸ்க் தன்னுடைய முதல் மனைவியைக் காதலித்திருக்கிறார்.

இந்த நிலையில், பல வருடங்கள் கழித்து மஸ்க் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அவரைக் காதலித்த ஜெனிஃபர் தற்போது முன்னாள் காதலர் எலான் மஸ்க்குடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மஸ்க் அவருக்கு அன்பின் நிமித்தமாகக் கொடுத்த பொருள்கள் ஆகியவற்றை ஏலம்விட முடிவுசெய்திருக்கிறார்.

எலான் மஸ்க் - ஜெனிஃபர் க்வின்
எலான் மஸ்க் - ஜெனிஃபர் க்வின்
Jennifer Gwynne

அவர் தன்னுடைய வளர்ப்பு மகனின் படிப்புச் செலவுக்காக இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். 48 வயதாகும் ஜெனிஃபர் க்வின் தற்போது தென் கரோலினாவில் வசிக்கிறார். இது தொடர்பாகப் பேசிய ஜெனிஃபர் க்வின், ``எங்கள் காதல் இனிமையானது. ஆனால் அது தொடரவில்லை. நாங்கள் ஒரே தங்குமிடத்தில் இருந்தோம், நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம்.

எலான் மாஸ்க்
எலான் மாஸ்க்

1995-ல் எலான் மஸ்க் ஆல்டோவுக்குச் சென்றபோது நாங்கள் பிரிந்தோம். அதேநேரத்தில் அவர் தன்னுடைய முதல் மனைவியான ஜஸ்டின் வில்சனுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். அவரின் கூச்ச சுபாவம் முதலில் என்னை ஈர்த்தது. அவர் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார். அப்போது அவர் எலெக்ட்ரிக் கார்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார், பள்ளியை ஒரு படிக்கல்லாகப் பார்த்தார். மஸ்க்கிடமிருந்து பெற்ற சில நினைவுப் பொருள்களை விற்பது தொடர்பாக பல ஆண்டுகளாக யோசித்துவருகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஆனால் இப்போது பலர் தங்கள் நினைவுச்சின்னங்களில் பணம் சம்பாதிப்பதைப் பார்த்த பிறகு முடிவு செய்தேன். என் சூழல் என்னை அதற்கு நிர்பந்தித்துவிட்டது. நான் ஏலத்தில்விடும் இந்தப் படங்களையும், குறிப்புகளையும் நீண்டகாலமாக வைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தபட்ச ஏலம் 100 டாலர். எலான் மஸ்க் கையொப்பமிடப்பட்ட பிறந்தநாள் அட்டையின் விலை 1,331 டாலர். இந்த அட்டையில், `பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெனிஃபர்! வித் லவ் - எலான்' என எழுதப்படிருக்கும். அவர் கையொப்பமிட்ட ஒரு டாலர் பில், எனக்கு பரிசளித்த ஒரு சிறிய பச்சை மரகதத்துடன் செய்யப்பட்ட 14-k தங்க நெக்லஸ் ஆகியவை ஏலத்தில் விடப்படுகின்றன. பட்டியலிடப்பட்டிருக்கும் பொருள்களுக்கான ஏலம் செப்டம்பர் 14-ம் தேதி முடிவடையும்” எனத் தெரிவித்திருக்கிறார்.