Published:Updated:

கொரோனா:`2021-க்கு முன் ஊழியர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை!’ - ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

தங்கள் ஊழியர்கள் அனைவரும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக அலுவலகம் வரத் தேவையில்லை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த மனிதக் குலத்தின் இயல்பு வாழ்க்கையையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஜனவரி மாதம் சீனாவில் இந்த வைரஸ் பரவியதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிற அனைத்து நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்தது. எனவே, பெரும்பாலான உலக நாடுகளும் ஊரடங்கை அறிவித்தன.

வொர்க் ஃப்ரம் ஹோம்டிம் கும்
வொர்க் ஃப்ரம் ஹோம்டிம் கும்

இதனால் சிறிய நிறுவனம் முதல் சர்வதேச அளவிலான மிக பெரும் நிறுவனம் வரை அனைவரும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லியது. பெரும்பாலான நிறுவனங்களில் மார்ச் மாதம் தொடங்கப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் முறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பெரும் தொழில் நிறுவனமான ஆப்பிள், தங்கள் ஊழியர்கள் 2021-க்கு முன்னதாக அலுவலகம் வரத் தேவையில்லை அவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

`சீனாவைத் தவிர்க்கும் ஆப்பிள்!’ - இந்தியாவில் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்

ப்ளூம்பெர்க் ஊடகத்துக்குப் பேட்டியளித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக். இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், ``2021-ம் ஆண்டுக்கு முன்னதாக எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்யத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றலாம். நிறுவனத்தின் நிலைமை, கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றியடைவது ஆகியவற்றைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

டிம் குக்
டிம் குக்

கொரோனா வெடித்தபோது முதன்முதலாக தங்கள் ஊழியர்கள் விரும்பினால் அவர்கள் எப்போதுமே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. தொடர்ந்து சமீபத்தில், கூகுள் தங்கள் ஊழியர்கள் 2021 ஜூன் மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் எனக் கூறியிருந்தது. தற்போது இவர்களின் வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து இந்த வருடம் முழுவதும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லியுள்ளது.

Google: `ஜூன் 2021 வரை வொர்க் ஃப்ரம் ஹோம்தான்!’ - கூகுளின் புது முடிவு
அடுத்த கட்டுரைக்கு