Published:Updated:

Viral Video: வங்கி வளாகத்துக்குள் திடீரெனப் புகுந்த காளை... பீதியில் பயந்து ஓடிய மக்கள்!

வங்கி வளாகத்துக்குள் திடீரென புகுந்த காளை ( ட்விட்டர் )

சாலையில் சுற்றித்திரிந்த காளை திடீரென வங்கிக்குள் புகுந்தது ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே தனியார் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த வங்கிக்குள் நேற்று பகல் நேரத்தில் காளை ஒன்று புகுந்தது. இதனால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பீதியடைந்தனர். காளையைக் கண்ட அலுவலர் ஒருவர் பயந்துபோய் தன் கையில் கிடைத்த ஆரஞ்சு நிறப் பொருளால் காளையை விரட்ட முயன்றார். ஆனால், அந்தக் காளை அவர்மீது பாய முயன்றது. சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்த காளை ஒருவழியாக வங்கியிலிருந்து வெளியேறியது.

சாலையில் சுற்றித்திரிந்த காளை திடீரென வங்கிக்குள் புகுந்தது ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் காளை அங்கிருந்த கார்களை சேதப்படுத்தியதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் வங்கித் தரப்பில் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

வங்கிக்குள் புகுந்து ஆட்டம் காட்டிவிட்டு, வீதிகளில் சுற்றித்திரிந்த அந்தக் காளையை, கால்நடைத்துறை ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.