Published:Updated:

``பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்கூட ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள்" - போப் வேதனை!

போப் பிரான்சிஸ்

``ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால், அதிலிருந்து கெட்ட சக்திகளான சாத்தான் வெளியே வந்து, இதயத்தைச் சலனப்படவைக்கிறது." - போப் பிரான்சிஸ்

``பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்கூட ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள்" - போப் வேதனை!

``ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால், அதிலிருந்து கெட்ட சக்திகளான சாத்தான் வெளியே வந்து, இதயத்தைச் சலனப்படவைக்கிறது." - போப் பிரான்சிஸ்

Published:Updated:
போப் பிரான்சிஸ்

ஆபாசப் படங்களை பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும்கூடப் பார்க்கிறார்கள் என போப்பாண்டவர் வேதனை தெரிவித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, ரோமில் படிக்கும் பாதிரியார்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸிடம், மொபைல் மூலம் இணையதளப் பயன்பாடு குறித்துக் கேட்கப்பட்டது.

மொபைல் இணையம்
மொபைல் இணையம்

இதற்கு பதிலளித்த அவர், "இணைய உலகில் உலவும் ஆபாசப் படங்களால் தீமையும் அபாயமும் விளைகின்றன. சாமானியர்கள் மட்டுமல்லாமல் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்கூட ஆபாச தளங்களைப் பார்க்கும் பழக்கத்தைக்கொண்டிருக்கிறார்கள்.

செல்போன், இணையம் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை, வாழ்க்கையில் நன்மையை விளைவிப்பதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும். நானும் தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்ப்போருக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறேன். போர்னோகிராபி குறித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள். ஆனால், இப்படியான ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால், அதிலிருந்து கெட்ட சக்திகளான சாத்தான் வெளியே வந்து, இதயத்தைச் சலனப்பட வைக்கிறது.

போப் ஆண்டவர்
போப் ஆண்டவர்

அரசுத் தரப்பிலிருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. என்றாலும், எல்லோரும் தங்களுடைய செல்போனில் ஆபாசப் படங்களை வைத்திருக்காமல் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அப்போதுதான் சலனம் இல்லாமல் வாழ முடியும். ஏனெனில், ஆபாசப் படங்களை பார்ப்பது பெரும் பாவமாகும்" எனத் தெரிவித்திருக்கிறார்