Published:Updated:

`வுகானில் இருந்து ஏன் மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை?' - சீனா மீது சந்தேகம் எழுப்பிய ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

'வுஹானிலிருந்து ஏன் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு வைரஸ் பரவவில்லை' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் தற்போது வரை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் என்பது தினம்தினம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவையும் அந்நாட்டின் அதிபரையும் கடுமையாக விமர்சிப்பதும் அதற்கு சீனா தரப்பில் தக்க பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவைச் சீண்டி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் அதிபர் ட்ரம்ப். நேற்று, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ நாம் சீனாவுடன் பழகுவது நல்ல விஷயம்தான். ஆனால், இனி அது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நான், பிறகு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு சீனாவுடன் நான் செய்துகொண்ட முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை தற்போது சற்று வித்தியாசமாகக் கருதுகிறேன்.

`ட்ரம்ப், மக்களை ஒன்றிணைப்பதாக நடிக்கக்கூட இல்லை!’ - கொதித்த முன்னாள் ராணுவச் செயலர்

கோவிட் -19 சீனாவிலிருந்து இந்த உலகத்துக்குக் கிடைத்த பரிசு. ஆனால், இது நிச்சயம் நல்ல பரிசு இல்லை. அவர்கள் வைரஸை ஆரம்பத்திலேயே பரவாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் மிக மோசமான பரிசைக் கொடுத்துவிட்டனர். வுஹான் அதிக மக்கள்தொகை கொண்ட சிக்கலான நகரம். அங்கு உருவான வைரஸ் எப்படி சீனாவின் பிற பகுதிகளுக்குப் பரவவில்லை? இது என்னுடையது மட்டுமல்ல மொத்த உலகத்தின் கேள்வியும் இதுதான்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

சீனா, அமெரிக்காவைப் பெரிதும் பயன்படுத்திக்கொண்டது, சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் உதவினோம், அவர்களுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் கொடுத்தோம். சீனாவுடனும் பிற நாடுகளுடனும் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள். ஆனால், அவை அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது” என்று வேதனை தெரிவித்தவர்,

“நாங்கள் வைரஸ் தடுப்பூசிகளைப் பற்றி ஒரு கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகிறோம். சில சாதகமான ஆச்சர்யங்களை நாங்கள் கொண்டுள்ளோம். வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார், ட்ரம்ப்.

`சீன மாணவர்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!' - ட்ரம்ப் நடவடிக்கையைச் சாடும் எதிர்க்கட்சிகள்
அடுத்த கட்டுரைக்கு