Published:Updated:

`இவள் எரிந்தாலும் எனக்குக் கவலையில்லை!’- தாயைக் காப்பாற்றிய மகளை எரித்த கொடூர தந்தை

அன்னா
அன்னா ( ACC News )

உக்ரைனில் தன் தாயை அடித்துத் துன்புறுத்திய தந்தையைத் தடுத்த பெண்ணின் முகத்தில் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்தியுள்ளார் கொடூர தந்தை.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி அன்னா க்றிட்கா. இவர் தன் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வந்துள்ளார். அன்னாவின் 38 வயதான தந்தை மது போதைக்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு வந்து அன்னாவின் தாய் நடாலியாவை அடித்துத் துன்புறுத்துவாராம். இப்படியான ஒரு சண்டையில் ஏற்பட்ட கோபத்தில்தான் தந்தை, அன்னாவின் முகத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார்.

மருத்துவமனையில்  சகோதரருடன் அன்னா
மருத்துவமனையில் சகோதரருடன் அன்னா
ACC News

அன்று நடந்த சம்பவம் பற்றி உள்ளூர் ஊடகங்களிடம் விவரித்த தாய் நடாலியா, ``அன்னாவின் தந்தை தினமும் குடித்துவிட்டு என்னை அடித்து, துன்புறுத்துவார். அன்று காலையும் அவர் அதிக போதையில் வீட்டுக்கு வந்தார். அதனால் எனக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் என் கணவர் என்னைக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்தார்.

அவரிடம் உதவி செய்யுமாறு நான் கெஞ்சினேன். அதற்கு அவர், `இவள் எரிந்தாலும் எனக்குக் கவலையில்லை’ என்று கூறி அமைதியாக நின்றார்.
அன்னாவின் சகோதரர்

இதைப் பார்த்த அன்னா, ஓடிவந்து தந்தையைப் பின்புறமாகப் பிடித்து இழுத்தாள். `இனிமேல் நீங்கள் அம்மா மீது கை வைக்க முடியாது’ எனக் கூறியபடியே அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். பின்னர் அவளை உதறிவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார். என் கணவர் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார் என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வந்து வீட்டில் தனியாக இருந்த அன்னாவின் முகம் மற்றும் அவளது அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றி, பற்றவைத்துவிட்டு ஓடியுள்ளார்.

தாய் நடாலியா
தாய் நடாலியா
ACC News

அன்னாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்கு வெளியிலிருந்த என் மூத்த மகன் ஓடி வந்து அன்னாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தான். தற்போது முகத்தில் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டபடி மருத்துவமனையில் அன்னா சிகிச்சை பெற்று வருகிறாள்” என்று கூறியுள்ளார்.

இதே சம்பவம் பற்றிப் பேசியுள்ள அன்னாவின் சகோதரர், ``வீட்டில் நடந்த எதுவும் எனக்குத் தெரியாது, நான் வெளியில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது திடீரென அன்னாவின் அலறல் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, அவளது முகம் மற்றும் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

துப்பாக்கிச்சூடு நடத்திய போதைக் கும்பல்; மனிதக் கேடயமான மகன்! -அமெரிக்காவை உலுக்கிய உச்சகட்ட கொடூரம்

உடனடியாக அவளை நான் வெளியில் இழுத்துவந்து அங்கு சிதறிக்கிடந்த பனிக்கட்டிகளை அன்னாவின் முகத்தில் வீசி தீயை அணைத்தேன். அப்போது என் தந்தை அருகில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் உதவி செய்யுமாறு நான் கெஞ்சினேன். அதற்கு அவர், `இவள் எரிந்தாலும் எனக்குக் கவலையில்லை’ என்று கூறி அமைதியாக நின்றார். பிறகு அருகில் உள்ளவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து அன்னாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அன்னாவின் முகம், கழுத்து, கை மற்றும் தலை ஆகிய பகுதிகள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன” எனப் பேசியுள்ளார்.

எரிந்தநிலையில் அன்னாவின் வீடு
எரிந்தநிலையில் அன்னாவின் வீடு
ACC News

``அன்னாவின் முகத்தில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இடத்தை நாங்கள் நீக்கிவிட்டோம். இருந்தும் அவருக்கு சில பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படுகிறது. நாங்கள் அவரது முகத்தைச் சரி செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அன்னாவின் மருத்துவத்துக்குத் தேவையான பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கொடுத்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அன்னாவின் தந்தையைக் கைது செய்துள்ள உக்ரைன் போலீஸ் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்துள்ளது.

பின் செல்ல